Just In
- 7 min ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 49 min ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 3 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 4 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற கார்த்திக் - அரசு வேலை தர கோரிக்கை
- Automobiles
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புரமோவ தாண்டி இருக்கு புரோகிராம்ல.. நாக்கை துருத்தி ஆரியை அடிக்க பாய்ந்த பாலாஜி.. மிட்நைட் சம்பவம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலையணையை தூக்கி எறிந்ததோடு நாக்கை துருத்தி பாலாஜி அடிக்க பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் உள்ள மொத்த ஹவுஸ்மேட்ஸும் ஒன்று சேர்ந்து ஆரியை டார்கெட் செய்து வருகின்றனர்.
சராசரியான ஒரு மனிதர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்க முடியாத ஒரு சூழ்நிலையில் உள்ளார் தனி ஆளாக உள்ளார் ஆரி.

விடிய விடிய சண்டை
ஜெயிலில் ஆரியை அசிங்கப்படுத்திய பாலாஜி, வெளியே வந்தப் பிறகும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களை தூண்டி விட்டு குளிர்காய்ந்தார். காலையில் நாமினேஷனில் தொடங்கிய பிரச்சனை நள்ளிரவு தாண்டி அதிகாலை வரை விடிய விடிய தொடர்ந்தது.

குறைகளை பார்க்காதீங்க
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் வெள்ளிக்கிழமை நடந்த சம்பவங்கள் ஒளிபரப்பப்பட்டன. அப்போது பிக்பாஸ் வீட்டின் லிவிங் ஏரியாவில் படுக்க போனார் ஆரி. அப்போது மத்தவங்க குறைகளை மட்டுமே பார்க்காதீங்க ஆரி என்றார் பாலாஜி. மேலும் உண்மையை பேசி விளையாடுங்க.. உண்மையை மறைச்சு விளையாடாதீங்க என்று வம்பிழுத்தார்.

பேச விரும்பாத ஆரி
மேலும் நீங்கள் ஏன் காதல் கண்ண கட்டுதுன்னு சொன்னீங்க?
நீங்க நாங்க காதல் பண்றத பார்த்தீங்களா? என்று கேட்டார். அதற்கு பதில் சொன்ன ஆரி, ஷிவானி அம்மா வந்து பேசிட்டாங்க. அதைப்பத்தி நான் பேச விரும்பல என்றார் ஆரி.
இல்லை பேசுங்க என்று வம்படியாக இழுத்தார் பாலாஜி.

எனக்கு இங்கிதம் இருக்கு
உன் நல்லதுக்காகதான் சொல்கிறேன் என்றார் ஆரி. அதற்கு என் நல்லத பார்க்கவேண்டாம் என்று பேசுங்க என்று வேண்டும் என்றே வம்புக்கு இழுத்தார். ஆனால் எனக்கு இங்கிதம் இருக்கு நான் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டு சென்றார். அதற்கு பதில் பேசியிருந்தா நமக்குள்ள சண்டை வந்திருக்காது என்று மீண்டும் ஆரியை வம்பிழுத்தார்.

நீ மனுஷனா?
மேலும் பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க ஆரி என்று வார்த்தைக்கு வார்த்தை ஆரி ஆரி என்றார். மேலும் நீயெல்லாம் பெரிய மனுஷனா என்றும் கேட்டார் பாலாஜி. அதற்கு நான் பெரிய மனுஷன் இல்ல என்று கூறிய ஆரியிடம், என் கேள்விக்கு பதில் சொல்லுங்க ஆரி என்றார்.

மனுஷனே இல்ல
என்னை பத்தி ஆஜித், ரம்யான்னு எல்லார்க்கிட்டேயும் பேசிட்டு இருக்கீங்க. பெஸ்ட் பர்ஃபாமர் கொடுத்தப்ப இளிச்சிட்டு வாங்கிட்டு போயிடுவீங்கள்ள.. நீ கேப்டனா இருக்க அன்ஃபிட் இல்ல, மத்தவங்க குறைகளை மட்டுமே சொல்லி ஆடுற நீ மனுஷனா? நீயெல்லாம் மனுஷனே இல்ல என்றார்.

வெளியே மரியாதையே வேற..
மேலும் இதுவே நீ வெளியே இருந்தா உனக்கு வெளியே கொடுக்ற மரியாதையா வேற, மக்கள் பார்க்குறாங்களேன்னு சும்மா விடுறேன் என்றார். பாலா ஆரியை பேசும் வரை அமைதியாக இருந்த ரம்யா, ஆரி தனது தரப்பு நியாயத்தை சொன்ன போது மட்டும் போங்க ஆரி போங்க ஆரி என்றார்.

நக்கலடித்த ரம்யா
அதற்கு உங்க ஃபிரண்ட்ட கூட்டிட்டு போங்க என்று கூறினார் ஆரி. இதனால் கடுப்பான ரம்யா, ஓ.. ஓகே ஓகே ஆரி.. தேங்க்யூ மை டியர் ஃபிரண்ட்.. என்று கும்பிடு போட்டு ஆரியை நக்கலாக வெறுப்பேற்றினார் ரம்யா. மேலும் எனக்கு இங்க யாரும் ஃபிரண்ட் இல்ல நான் உங்கக்கிட்ட சொன்னதே இல்லை என்று ஆரியிடம் எகிறினார்.

அடிக்க பாய்ந்த பாலாஜி
தொடர்ந்து பேசிய ஆரி, நான் பாட்டுக்கு படுக்கலாம்னு வர்றேன்.. தேவையில்லாம என்னை இழுக்குறான். நான் கேட்டேனா.. ஷிவானி டாப்பிக்க யார் எடுத்தா என்று சோமிடம் கூறினார் ஆரி. அப்போது அங்கு வந்த ஷிவானி டாப்பிக்க உடுய்யா உடுய்யா என நாக்கை துருத்தி தலையணையை தூக்கி எறிந்து ஆரியை அடிக்க பாய்ந்தார் பாலாஜி.

ஆரிக்கு எதிராகவே..
பாலாஜி அடிக்க பாய்ந்த போது ரியோ ரம்யா, கேபி என எல்லாரும் ஆரியை மட்டுமே அந்த டாப்பிக்கை பேசாதீர்கள் என குற்றம்சாட்டினர் கண்டித்தனர். ஆனால் அந்த டாப்பிக்கை எடுத்த பாலாஜியை ஒருத்தர் கூட அமைதிப்படுத்தவில்லை. அவரை பேசாதே என்றும் கூறவில்லை. மொத்த வீடும் ஆரிக்கு எதிராகவே இருந்தது.