சனம் கூட சொல்லாத வார்த்தைகளை சொன்னார்.. மனசுல தச்சுருச்சு.. அவரால் ரொம்பவே ஹர்ட்டான தாத்தா!
சென்னை: சனம் ஷெட்டி கூட சொல்லாத பல வார்த்தைகளை சொல்லி பாலாஜி தன்னை ரொம்பவே காயப்படுத்தி விட்டதாக கமலிடம் சுரேஷ் சக்கரவர்த்தி வருத்தப்பட்டார்.
Recommended Video
நேற்றைய எபிசோடில் தவறு என மனதில் பட்டதையெல்லாம் விளாசி எடுத்தார் கமல்.
குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தியை தகாத வார்தைகளால் பேசிய சனம் ஷெட்டியை லெப்ட் அன்ட் ரைட் வாங்கினார் கமல்.

ஆங்கரிங் பண்ணாதீங்க
இதேபோல் அர்ச்சனாவையும் ஆங்கரிங் வேலை பார்க்காதீர்கள் உங்கள் வேலையை பாருங்கள் என மறைமுகமாக விளாசினார் கமல். சுரேஷை பலமுறை மன்னிப்பு கேட்க வைத்து தன்னுடைய டாமினேஷனை அர்ச்சனா வெளிப்படுத்தியதாக கூறினார்.

பாலாஜி பக்கம் திரும்பிய கமல்
அதற்கு சத்தியமாய் இல்லை என்ற அர்ச்சனா என் வேலையை நான் பார்த்திருக்க வேண்டும் என கமலிடம் மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து பாலாஜி பக்கம் திரும்பிய கமல், சனம் ஷெட்டி பேசியதை விடவும் நீங்கள் அதிகமாக பேசி சுரேஷை காயப்படுத்தி விட்டீர்கள் என்றார்.

யாரோ அடிப்பது போல
என்ன ஏது என்றே கேட்டு விசாரிக்காமல் அவரை திட்டிவிட்டதாகவும் கூறினார் கமல். அதனை கேட்ட சுரேஷ் ஆமாம் சார், என்னை யாரோ 5 பேர் அடிப்பது போலவும், பாலாஜி காப்பாற்றுவதும் போலவும் நடந்து கொண்டார்.

குரல் தழுதழுத்து
சனம் ஷெட்டி பேசியதை காட்டிலும் பாலாஜி பேசியதுதான் மனதில் தைத்து விட்டது. ரொம்பவே வருத்தப்பட்டேன். அவர் கேட்க வேண்டிய கேள்வியையெல்லாம் பிக்பாஸ்தான் கேட்டார் என சுரேஷ் சக்கரவர்த்தி பாலாஜியால் காயப்பட்டதை குரல் தழுதழுக்க கூறினார்.

அப்படி நினைத்தேன்
இதனைக் கேட்ட கமல் பேசும் போது வார்த்தைகளை பார்த்து உபயோகப்படுத்துங்கள் என்றார். ஆனால் அதற்கு விளக்கம் அளித்த பாலாஜி, அவர் வேண்டுமென்றேதான் சனம் ஷெட்டியை அடித்ததாக நினைத்தேன். இந்த வீட்டிலேயே நான் அதிகம் பேசுவது அவரிடம் தான், தாத்தா என்னிடம் பேசாமல் இருந்தது எனக்கு பெரும் டிப்ரஷனை தந்தது என்றார்.


Click it and Unblock the Notifications











