வாவ்.. செம.. கார்னர் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்.. இந்திய அளவில் ட்ரென்ட்டாகும் பாலாஜி.. வேற லெவல் போங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் ஹவுஸ்மேட்டுகளின் கார்னரால் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறார்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் பேட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ்.
மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது முதல் அடிக்கடி செய்திகளில் அடிப்பட்டு வருகிறார்.

குடிகாரர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்க்கின் போது அவர் தனது அப்பாவும் அம்மாவும் குடிகாரர்கள் என்றார். சிறு வயதில் அன்பு பாசம், சாப்பாடு என எனக்கு கிடைக்க வேண்டிய எதுவுமே கிடைக்கவில்லை என்றும் கூறி கதறினார்.

டுபாக்கூர் சர்ச்சை
ஆனால் அவர் சொன்ன தகவல்கள் பொய் என சமூக வலைதளங்களில் பரவியது. இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் தனது மனதில் பட்டதை பேசி அடிக்கடி வம்பில் சிக்கி வருகிறார். சனம் ஷெட்டி பங்கேற்ற அழகிப் போட்டியை டுபாக்கூர் என்றார் கமலிடம் வாங்கிக் கட்டினார்.

அடிக்கடி பஞ்சாயத்து
சுரேஷ் சக்கரவர்த்தியை, நாடா காடா டாஸ்க்கின் போது கடுமையாக பேசினார். தொடர்ந்து ஹவுஸ்மேட்டுகளுடன் ஏதாவது ஒரு பஞ்சாயத்தில் சிக்கி வருகிறார் பாலாஜி. அர்ச்சனா, ரியோ, வேல்முருகன் உள்ளிட்ட பலருடன் பாலாஜி முருகதாஸுக்கு நான்சிங்காக உள்ளது.

தூங்கிய பாலாஜி
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் தூங்கிக் கொண்டிருந்த பாலாஜியை எழுப்பி ஹவுஸ் கீப்பிங் செய்ய சொல்லுமாறு, வேல்முருகனை உசுப்பிவிட்டார் அர்ச்சனா. அவரது பேச்சை கேட்டு தூங்கிக்கொண்டிருந்த பாலாஜியை எழுப்பிய வேல்முருகன் வீட்டை கூட்டுமாறு கூறினார்.

அம்மி விவகாரம்
இதனால் கடுப்பான பாலாஜி, நான் கேப்டனால் எல்லோரையும் அம்மில அரைக்க சொல்கிறேன் என்று கூறிக் கொண்டே வீட்டை சுத்தம் செய்தார். இதனை பெரிய பிரச்சனையாக்கினார் அர்ச்சனா. ரியோவும் கூட சேர்ந்து ஒத்து ஊத குரூப்பிஸம் அப்பட்டமாய் வெளிப்பட்டது.

அலறவிட்ட பாலாஜி
பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா அவரது குருப்போடு சேர்ந்து பாலாஜியை கார்னர் செய்தார். ஆனால் ஒன் மேன் ஆர்மியாக நின்று அனைவரையும் அலறவிட்டார் பாலாஜி. பாலாஜி, அர்ச்சனா அன்ட் கோவை கையாண்ட விதம் பலரையும் கவர்ந்தது.

இந்திய அளவில் ட்ரென்டிங்
இதனை தொடர்ந்து #BalajiMurugaDoss என்ற ஹேஷ்டேக் இரவு முதல் இந்திய அளவில் ட்ரென்ட்டாகி வருகிறது. இதில் பாலாஜி முருகதாஸின் நடத்தையை பாராட்டியும் விமர்ச்சித்தும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











