Akhanda 2: Thaandavam 1 Day Box Office Collection: பாலய்யானா சும்மாவா.. அகண்டா 2 முதல் நாள் வசூல்
ஹைதராபாத்: நடிகர் பாலய்யா நடிப்பில் ஒரு படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் மத்தியில் தரமான மசாலா படம் உறுதி என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது. அப்படி இருக்கும்போது அவரது 50 ஆவது திரை ஆண்டில் அகண்டா 2 : தாண்டவம் படம் நேற்று வெளியாகி மசாலா பட ரசிகர்களுக்கு பெரும் விருந்தாகி உள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
அகண்டா 2: தாண்டவம் படம் கடந்த வாரமே வெளியாகி இருக்க வேண்டியது. ஆனால் படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியாகவில்லை. இப்படி இருக்கும்போது படம் நேற்று அதாவது டிசம்பர் 12ஆம் தேதி வெளியானது. படத்தை இயக்குநர் பேயாபதி ஸ்ரீனு இயக்கி உள்ளார். படத்தில் பாலய்யா, சம்யுக்தா மேனன், ஆதி பினிஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாகமே மிகப்பெரிய வெற்றியை குவித்தது. அப்படி இருக்கும் போது இரண்டாம் பாகத்தின் மீது தனி எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.

தரமான மசாலா படம்: படத்தின் டிரைலர் வெளியானபோதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பாலய்யா என்றாலே பவர் ஹவுஸ் தான் என்பது போல, தமிழ்நாட்டில் அவரது படத்திற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்தார்கள். படம் வெளியாகி தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமா ஊடகங்களில் கொஞ்சம் கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. இப்படி இருக்கும்போது படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம்.

வசூல்: அகண்டா 2: தாண்டவம் படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் ரூபாய் 30 கோடி வசூலித்துள்ளது என்று சாக் நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. அதாவது முதல் நாள் இரவு பிரீமியர் ஷோவையும் கணக்கில் வைத்தே இந்த வசூல் படைத்துள்ளது அகண்டா 2: தாண்டவம். இதில் தெலுங்கில் மட்டும் ரூபாய் 29.5 கோடிகளும் மற்ற நான்கு மொழிகளில் சேர்த்து ரூபாய் 50 லட்சமும் என வசூலித்துள்ளது. இது உள்நாட்டு வசூல் தான், வெளிநாட்டிலும் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த தகவல்கள் படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











