64 வயது நடிகர்.. 30 வயது நடிகையை பின்னாடி இப்படி போட்டு அடிக்கலாமா?.. பாவம் லெஜண்ட் ஹீரோயின்!
ஹைதராபாத்: இந்த பொங்கலுக்கு டோலிவுட்டில் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்துக்குப் போட்டியாக பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள டாக்கு மகராஜ் திரைப்படம் வெளியாகிறது. மேலும், வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சங்கராந்திக்கி வஸ்துன்னாம் படமும் வெளியாகிறது.
இதில் பெரிய போட்டியே கேம் சேஞ்சர் vs டாக்கு மகராஜ் தான் என்கின்றனர். கடந்த ஆண்டு தமிழில் வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், பாலகிருஷ்ணாவின் டாக்கு மகராஜ் படம் எந்தளவுக்கு கலெக்ஷனை அள்ளும் என்பதை பார்க்க டோலிவுட் திரையுலகம் காத்துக் கொண்டிருக்கிறது.

ஜனவரி 12ம் தேதி பாலகிருஷ்ணா, ஊர்வசி ரவுத்தேலா, பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரக்யா ஜெய்ஸ்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள டாக்கு மகராஜ் படம் வெளியாக உள்ள நிலையில், அதன் "டாபிதி டாபிதி" பாடல் வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதற்கு முக்கிய காரணமே லெஜண்ட் ஹீரோயின் பேக்கில் இரண்டுக் கைகளால் பாலகிருஷ்ணா வெறித்தனமாக தாக்கும் ஸ்டெப்கள் தான்.
64 வயதிலும் இப்படியொரு ஆட்டமா?: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வயதில் நடிகைகளை பார்க்கவே விடமாட்றாங்க, தமன்னா பக்கத்திலேயே ஜெயிலர் படத்தின் காவாலா பாடலில் சேர்ந்து ஆடவில்லை என புலம்பியிருந்தார். அதே போல மஞ்சு வாரியர் உடனும் நெருக்கமாக அவருக்கு ஆடும் நடன அசைவுகளை வேட்டையன் படத்திலும் வைக்கவில்லை. ஆனால், 64 வயதில் 30 வயது நடிகை ஊர்வசி ரவுத்தேலா பேக்கில் இரண்டு கைகளால் தபேலா வாசிக்கும் ஸ்டெப்களை எல்லாம் பாலகிருஷ்ணா எப்படி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் போட்டு நடனமாடுகிறார் என நெட்டிசன்கள் பொறாமையில் பொங்கி வழிகின்றனர்.

மோசமான கொரியோகிராஃபி: தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து மோசமான கொரியாகிராஃபியை நடன இயக்குநர்கள் வைத்து வருகின்றனர். ஏற்கனவே ஜானி மாஸ்டர் மீது பாலியல் பஞ்சாயத்து கிளம்பிய நிலையில், புஷ்பா 2 படத்திலும் தற்போது டாக்கு மகராஜ் படத்திலும் நடன இயக்குநர்கள் கவர்ச்சியின் உச்சிக்கே சென்று மோசமான கொரியாகிராஃபி ஸ்டெப்களை எப்படித்தான் போடுகின்றனர் என்று தெரியவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரொம்ப வல்கரா இருக்கு: லெஜண்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பாலிவுட் நடிகை தற்போது பாலகிருஷ்ணா படத்தில் நடித்துள்ளார். கவர்ச்சியான உடையில் செம கிளாமராக டான்ஸ் ஆடி வரும் நிலையில், அவரது பின்னாடி இப்படி அதுவும் இரண்டு கைகளை வைத்து குத்துவது போன்ற நடன அசைவுகள் ரொம்பவே வல்கராக உள்ளது. இதற்கும் இளைஞர்கள் ஃபீலிங்ஸ் பாடலுக்கு போட்டது போல ரீல்ஸ் போட்டு டிரெண்டாக்குவார்களே என கண்டனங்களை கிளப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications