என்ன கொடுமை சரவணன்.. காஜல் அகர்வாலை அப்படி அழைத்த பாலய்யா!.. டென்ஷனான ரசிகர்கள்!
சென்னை: 90 கோடி பட்ஜெட்டில் படமாக்கப்பட்ட பாலய்யாவின் பகவந்த் கேசரி திரைப்படம் 175 கோடி வரை வசூல் ஈட்டிய நிலையில், அந்த படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது.
பகவந்த் கேசரி படம் தமிழில் பெரிதாக ஓடவில்லை என்றாலும், தற்போது அதன் தமிழ் டப்பிங் வெர்ஷன் காட்சிகள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

அதிலும், நடிகை காஜல் அகர்வால் குறித்து பாலய்யா சொல்லும் அந்த வசனம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது.
ரெண்டு ஹீரோயின்: பாலய்யா படங்கள் என்றாலே ரெண்டு, மூன்று ஹீரோயின்கள் தான் நடித்து வருகின்றனர். வீர சிம்ஹா ரெட்டி படத்தில் ஸ்ருதிஹாசன், ஹனி ரோஸ், வரலக்ஷ்மி சரத்குமார் என நடிகைகள் நடித்த நிலையில், சமீபத்தில் வெளியான பகவந்த் கேசரி படத்தில் காஜல் அகர்வால் மற்றும் டோலிவுட்டின் இளம் நடிகை ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஸ்ரீலீலா பாலய்யாவின் மகளாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கைதி, விக்ரம் சீனுக்கு எல்லாம் ஆப்பு: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரசாந்த் நீல் உள்ளிட்ட இயக்குநர்கள் பெரிய பெரிய துப்பாக்கிகளை வைத்து தற்போது ஹீரோக்களை சுட வைக்கும் காட்சிகளை வைத்து வரும் நிலையில், பகவந்த் கேசரி படத்திலும் அது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால், அந்த துப்பாக்கிகளில் எல்லாம் சத்தம் பெரிதாக வராது என சொல்லி விட்டு, வெல்டிங் கேஸை உடைத்து விட்டு எதிரிகளின் கார்களை பறக்கவிட்டு வேட்டுச் சத்தம் கொடுக்கும் காட்சிகளையும் ரசிகர்கள் ஷேர் செய்து ரசித்து வருகின்றனர்.
காஜல் அகர்வால் ஆன்ட்டியா?: இந்நிலையில், இன்னொரு கொடுமையான சீன் ஒன்றை ரசிகர்கள் தற்போது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளனர். அந்த காட்சியில் நடிகை காஜல் அகர்வாலை சூப்பர் மார்க்கெட்டில் சந்திக்கும் பாலய்யா அவரை ஆன்ட்டி என அழைப்பதை பார்த்த ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விட்டது.
தாத்தா: பதிலுக்கு காஜல் அகர்வால் தாத்தான்னு கூப்பிட்டா எப்படி இருக்கும், 30 பிளஸ் என்றவுடன் ஆன்ட்டி என பாலய்யா அழைப்பது கிரிஞ்ச் உச்சம் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். பாலய்யா என்றாலே கிரிஞ்ச் தானே என்றும் அதுதான் அவரது டிரேட் மார்க் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
விசித்ரா விவகாரம்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பாலய்யா பெயர் குறிப்பிடாமல் அவர் பற்றிய மேட்டரை விசித்ரா பேசிய நிலையில், பலரும் பாலய்யாவுக்கு எதிராக கமெண்ட்டுகள் போட்டார்கள். ஆனால், கமல் சார் விசித்ரா அந்த நடிகரின் பெயரை குறிப்பிடாதது அவரது பெருந்தன்மை என பேசியதை பார்த்த ரசிகர்கள் நல்லா சமாளிக்கிறீங்க சார் என கலாய்த்தனர்.


Click it and Unblock the Notifications











