சிகரெட் போட்டு விளையாடுற இடமா அது? சர்ச்சையில் சிக்கிய பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி ட்ரெய்லர்!
ஹைதராபாத்: சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிப்பதை எல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே விட்டு விட்டு சிவாஜி படத்தில் சிக்லெட்டை தூக்கிப் போட்டு சாப்பிடும் காட்சிகளில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
இந்நிலையில், வீரசிம்மா ரெட்டி ட்ரெய்லரில் நந்தமுரி பாலகிருஷ்ணா சிகரெட்டை பிடிப்பது மட்டுமின்றி நடிகையின் நெஞ்சில் போட்டு பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்று பரபரப்பை கிளப்பி உள்ளன.
வீரசிம்மா ரெட்டி படத்தில் பாலய்யாவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ள நிலையில், அவரது நெஞ்சில் சிகரெட்டை போட்டு பிடித்தாரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சூப்பர்ஸ்டாரே விட்டுட்டாரு
இந்திய சினிமாவிலேயே நடிகர் ரஜினிகாந்த் போல சிகரெட்டை வித விதமாக ஸ்டைல் காட்டி பிடித்த நடிகர் எவருமே இருக்க மாட்டார்கள் என்றே சொல்லும் அளவுக்கு பல படங்களில் வித்தியாசம் காட்டி அசத்தி இருப்பார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி படத்தில் சிகரெட்டுக்கு பதிலாக சிக்லெட்டை தூக்கிப் போட்டு ஸ்டைலாக சாப்பிடும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

சிகரெட் பிடிக்கும் பாலகிருஷ்ணா
ஹீரோக்கள் நெகட்டிவ் ஷேடில் நடிக்க வேண்டுமென்றால் உடனடியாக கையில் சிகரெட்டையும் விஸ்கி பாட்டிலையும் எடுத்துக் கொள்வார்கள். அதே நேரத்தில் மாஸாக காட்டவும் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் சினிமாவில் அரங்கேறி வருகின்றன. வீரசிம்மா ரெட்டி படத்தில் டெரரான தாதாவாக பாலகிருஷ்ணாவை காட்ட அவரை சிகரெட் பிடிக்க வைத்துள்ளனர்.

நெஞ்சில் போட்டு பிடித்து
வீரசிம்மா ரெட்டி ட்ரெய்லர் வெளியாகி 14 மணி நேரத்தில் 4 மில்லியன் வியூஸ் கடந்துள்ள நிலையில், அந்த ட்ரெய்லரில் ஹீரோயின் நெஞ்சில் சிகரெட்டை போட்டு தனது வாயில் பிடிக்கும் காட்சி ஒன்று மின்னல் வேகத்தில் வந்து சென்றாலும் பலரையும் அந்த காட்சி முகம் சுளிக்க வைத்துள்ளது. சிகரெட் பிடிப்பதே தவறே, இதில் ஒரு நடிகையின் மார்பில் சிகரெட்டை போட்டு பிடிப்பது சரியா என தெலுங்கு சினிமா ரசிகர்களே விளாசி வருகின்றனர்.

ஸ்ருதிஹாசன் மீதா
இந்த பொங்கலுக்கு (அங்கே சங்கராந்தி) சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி என இரு சீனியர் ஹீரோக்களின் படங்களிலும் ஸ்ருதிஹாசன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இந்நிலையில், அவர் நெஞ்சிலா சிகரெட்டை போட்டு பாலகிருஷ்ணா பிடித்தார் என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.

சந்திரிகா ரவி நெஞ்சில்
ஸ்ருதிஹாசன், ஹனிரோஸ் என இரு ஹீரோயின்கள் படத்தில் நடித்துள்ள நிலையில், அவர்கள் இருவர் நெஞ்சிலும் இல்லை என்றும் குத்தாட்டப் பாடலில் நடித்துள்ள இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் பேயாக நடித்து கவர்ச்சியில் மிரட்டிய சந்திரிகா ரவியின் நெஞ்சில் தான் பாலகிருஷ்ணா சிகரெட் போட்டு பிடித்துள்ளார் என அவரது ரசிகர்கள் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

ரொம்ப தவறு
மாஸா காட்டுறேன், ஸ்டைலா காட்டுறேன்னு இப்படி எந்தவொரு நடிகையாக இருந்தாலும் அவருடைய நெஞ்சில் சிகரெட் போட்டு பிடிப்பது போல நடிப்பது மிகப்பெரிய தவறு என நெட்டிசன்கள் அந்த காட்சியை நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











