அடாத மழையிலும் அகண்டா 2 புரொமோஷனுக்காக சென்னை வந்த பாலகிருஷ்ணா.. ஹீரோயினுடன் ‘கோட்’ ஹீரோ ஈகோ?

சென்னை: 50 ஆண்டுகளாக ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறேன், எல்லாமே இறைவன் மற்றும் என் அம்மா, அப்பா கொடுத்த ஆசிர்வாதம் என அழகு தமிழில் அகண்டா 2 படத்திற்காக சென்னைக்கு வந்து புரொமோஷன் செய்த பாலகிருஷ்ணாவை பார்த்து இளம் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் வேண்டும் என கேட்கும் பல நடிகைகள் தங்கள் படங்களுக்கு முறையாக புரமோஷனுக்கு கூட செல்வதில்லை. சினிமாவை மார்க்கெட்டை பொறுத்தவரை கன்டென்ட் தான் கிங். சில்க் ஸ்மிதாவுக்காக ஒரு காலத்தில் ரசிகர்கள் தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக சென்றனர்.

Balakrishna done Akhanda 2 promotion in Chennai during rain but GOAT actor Sudhir Anand abscond

பல முன்னணி நடிகைகள் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடினாலும், அவர்கள் திடீரென உமன் சென்ட்ரிக் படங்களில் நடிக்கும் போது ரசிகர்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லை. துல்கர் சல்மான் நடித்த காந்தா திரைப்படம் ஓடவில்லை. ஆனால், அதே நேரத்தில் துல்கர் சல்மான் தயாரிக்க கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா சேப்டர் 1 சந்திரா திரைப்படம் 300 கோடி வசூலை ஈட்டியது.

கம்மி பட்ஜெட் பல நூறு கோடி பாக்ஸ் ஆபிஸ்: 100 கோடி பட்ஜெட்டில் எடுத்த பல படங்கள் இந்த ஆண்டு தக் லைஃப் படத்தை போல படுதோல்வியை சந்தித்ததை பார்த்து இருக்கிறோம். குறைவான பட்ஜெட்டில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி 90 கோடி வசூலையும், 16 கோடி பட்ஜெட்டில் உருவான காந்தாரா 400 கோடி வசூலையும் ஈட்டியது. 30 கோடி பட்ஜெட்டில் இந்த ஆண்டு வெளியான லோகா திரைப்படம் 300 கோடி வசூல் செய்து உமன் சென்ட்ரிக் படங்கள் ஓடாது என்கிற மாயையையும் விலக்கியது.

அடாத மழையிலும் அகண்டா 2 புரொமோஷன்: கடந்த வாரம் தமிழ் சினிமாவில் வெளியான தனுஷின் தேரே இஷ்க் மே மற்றும் கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்கள் வசூலில் அடிவாங்கின. இந்த வாரம் ரிலீஸ் செய்ய வேண்டாம் என லாக்டவுன் மற்றும் வா வாத்தியார் படங்கள் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டன. ஆனால், அடாத மழையிலும் நம்பிக்கையுடன் சென்னைக்கு வந்து அகண்டா 2 படத்துக்கான புரொமோஷனை பாலகிருஷ்ணா செய்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தனுஷ் கூட தேரே இஷ்க் மே படத்தை தமிழ்நாட்டில் புரொமோட் செய்யவில்லை.

Balakrishna done Akhanda 2 promotion in Chennai during rain but GOAT actor Sudhir Anand abscond
Photo Credit:

ஹீரோயினுடன் ஈகோ மோதல்: தெலுங்கில் சுதீர் ஆனந்த், திவ்யபாரதி நடிப்பில் உருவாகியுள்ள GOAT திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. ஏற்கனவே இயக்குநர் குறித்தும் நடிகர் சுதீர் ஆனந்த் அதை கண்டுக்கொள்ளவில்லை என ஹீரோயின் திவ்யபாரதி ட்விட்டரில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. படத்தில் இருந்து இயக்குநர் நரேஷ் குப்பிலியை நீக்கிவிட்டு தயாரிப்பாளர் மொகுலா சந்திரசேகரே படத்தை ரிலீஸ் செய்கிறார். இந்நிலையில், ஹீரோயினுடனான ஈகோ மோதல் காரணமாக படத்தின் ஹீரோ சுதீர் ஆனந்த் புரமோஷனுக்கு கூட வருவதில்லை. பாலய்யா போன்ற ஜாம்பவான் நடிகர்களே இந்த வயதிலும் தங்களது படத்தை புரொமோட் செய்ய பல மாநிலங்களுக்கு பறந்து வரும் நிலையில், இளம் நடிகர்கள் இப்படியெல்லாம் இருக்கலாமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X