ஃபோட்டோ எடுத்த ரசிகரை தாக்கிய பாலகிருஷ்ணா...வைரலாகும் வீடியோ
ஐதராபாத் : நடிகரும், தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ.,வுமான நந்தமுரி பாலகிருஷ்ணா, மீண்டும் ஒரு ரசிகரை தாக்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலகிருஷ்ணா, தனது பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்துபூரில் உள்ள கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டிற்கு நேற்று சென்றார். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர், தன்னிடம் இருந்த கேமராவால் பாலகிருஷ்ணாவை ஃபோட்டோ எடுக்க முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணா, அந்த நபரை கோபமாக திட்டியதுடன், அடித்துள்ளார். இந்த சம்பவத்தை மற்றொருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார்.
பாலகிருஷ்ணா ரசிகரை தாக்குவது ஒன்றும் புதியதல்ல. இதற்கு முன்பும், கூட்ட நெரிசலில் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரையும் அவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments
balakrishna fan slap photo actor balakrishna பாலகிருஷ்ணா ரசிகர் போட்டோ நடிகர் பாலகிருஷ்ணா தெலுங்கு தேசம்


Click it and Unblock the Notifications