ரசிகரை அடித்த நடிகர்: பலே காரணம் சொல்லும் மனைவி
Recommended Video

ஹைதராபாத்: தனது ரசிகரையே நடிகர் பாலகிருஷ்ணா அடித்தது குறித்து அவரின் மனைவி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிடுபவர்களுக்கு ஆதரவாக நடிகர் பாலகிருஷ்ணா பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பிரச்சாரம் செய்ய வந்த பாலகிருஷ்ணாவுடன் சேர்ந்து ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுக்க முயன்றார்.
அவர் தனக்கு மிக அருகில் வந்ததால் கடுப்பான பாலகிருஷ்ணா அவரை அனைவர் முன்பும் அடித்துவிட்டார்.
பாலகிருஷ்ணா
பாலகிருஷ்ணா தேர்தல் பிரச்சாரத்தில் ரசிகரை அடித்தபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த வீடியோ வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரசிகர்கள்
பாலகிருஷ்ணா தனது ரசிகரை அடித்தது இது ஒன்றும் முதல் முறை அல்ல. அவர் கோபம் வந்துவிட்டால் எங்கு இருக்கிறோம் என்பதை எல்லாம் பார்க்காமல் அடித்துவிடுவார். தற்போது தேர்தல் நேரம் என்பதால் அவர் ரசிகரை அடித்தது பெரிய பிரச்சனையாகியுள்ளது.

வசுந்தரா தேவி
ரசிகரை அறைந்த தனது கணவருக்கு ஆதரவாக பேசியுள்ளார் வசுந்தரா தேவி. என் கணவர் தன் ரசிகர்களை மிகவும் நேசிப்பதால் தான் அடிக்கிறார். அவர் அப்படி அடிப்பதால் ரசிகர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார் வசுந்தரா.

உதவி
என் கணவர் பாலகிருஷ்ணா ஏழைகள் மீது அதிக அக்கறை கொண்டவர். அவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்பவர். அவர் யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டார் என்று வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











