ஆந்திர முதல்வர் மனைவிக்கு முத்தம்.. பத்து தல படத்தை நேர்ல காட்டிய பாலகிருஷ்ணா.. என்டிஆர் மகனாச்சே!

ஹைதராபாத்: சினிமாவிலும் ஆந்திர அரசியலிலும் கொடி கட்டி பறந்த என்.டி. ராமராவ் ஆட்சி தான் இன்னமும் அங்கே நடைபெற்று வருகிறது. என்.டி. ராமராவின் மருமகன் சந்திரபாபு நாயுடு தான் மீண்டும் முதலமைச்சராக தேர்வாகி ஆட்சி நடத்தி வருகிறார். இன்று முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழாவுக்கு ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நந்தமுரி பாலகிருஷ்ணாவும் கலந்துக் கொண்டார்.

என்டிஆரின் மகனான பாலகிருஷ்ணா அரசியலில் ஆர்வம் செலுத்தினாலும் ஆந்திராவில் முதலமைச்சர் பதவிக்கு பெரிதாக ஆசைப்படவில்லை. அவரது சகோதரி கணவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்கும் விழாவுக்கு வந்து தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.

Balakrishna Tollywood Pathu Thala Rajinikanth Chandrababu Naidu

மேடையில் தனது சகோதரியை பார்த்து தலையில் கை வைத்து, முத்தமிட்ட காட்சி தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

பாலகிருஷ்ணா பற்றி ரஜினி: ஓங்கி ஒரு உதை விட்டா காரே பறக்கும். நானோ, அமிதாப் பச்சனோ மற்ற நடிகர்களோ இப்படி நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால், பாலய்யா நடித்தால் ரசிகர்கள் அதை ரசிப்பார்கள். ஏனென்றால் அவரை பாலகிருஷ்ணாவாக மக்கள் பார்க்கவில்லை இன்றும் என்டிஆராகவே ரசிகர்கள் அவரை பார்க்கின்றனர் என ரஜினிகாந்த் சமீபத்தில் பாலய்யா குறித்து பேசினார். இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்தையும் அவரது மனைவி லதாவையும் பார்த்து பாலய்யா பேசிய காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

பதவியேற்பு விழாவில் பாலகிருஷ்ணா: ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்ற நிலையில், அந்த விழாவில் பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பவன் கல்யாண் அமைச்சராக பதவியேற்ற நிலையில், அவரது சகோதரர் சிரஞ்சீவி மற்றும் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மோடி, அமித்ஷா என பாஜக தலைவர்கள் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.

சகோதரிக்கு முத்தம்: பாலகிருஷ்ணாவின் சகோதரி நரா புவனேஷ்வரியை தான் சந்திரபாபு நாயுடு திருமணம் செய்துள்ளார். மேடையில் தனது சகோதரியை பார்த்த பாலகிருஷ்ணா அவர் தோளில் கை வைத்து தட்டி, தலையில் கை வைத்து ஆசி கூறி முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்திய காட்சிகள் ரசிகர்களை புல்லரிக்கச் செய்துள்ளது.

பத்து தல படமே ஓடுது: சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தின் கதையே ஆந்திராவில் ஓடுதே என்றும் அப்பா என்டிஆர் போல பாலய்யா முதல்வர் ஆகாமல் தங்கையின் கணவரை ஆக்கி அழகு பார்த்துள்ளாரே என்றும் பாலய்யா ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X