சினிமா குடும்பத்தில் இருந்து.. வருகிறார் இன்னொரு வாரிசு ஹீரோ..லாக்டவுன் முடிந்ததும் ஷூட்டிங்!
சென்னை: பிரபல ஹீரோவின் மகன் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ பாலகிருஷ்ணா. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
நடிகரும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமாராவின் மகன் இவர். இப்போது போயபதி ஶ்ரீனு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

வாரிசு நடிகர்கள்
தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகர்கள்தான் டாப் ஹீரோக்களாக இருக்கின்றனர். சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்களின் வாரிசுகள், அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ராம்சரண் தேஜா, பிரபல ஹீரோ சிரஞ்சீவியின் மகன். அல்லு அர்ஜுன், பிரபாஸ், நிதின், ஜூனியர் என்.டி.ஆர் உட்பட பெரும்பாலான ஹீரோக்கள் சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.

மோக்ஷக்னா
இந்நிலையில் நடிகர் பாலகிருஷ்ணாவும் தனது மகன் மோக்ஷக்னாவை (Mokshagna) ஹீரோவாக அறிமுகமாக்க முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான தகவல்கள் கடந்த சில வருடங்களாக வெளியாகி வந்தன. இந்நிலையில் அதை உறுதிப்படுத்தியுள்ளார் பாலகிருஷ்ணா. இதுபற்றி அவர் கூறும்போது, எனது மகன் மோக்ஷக்னாவின் சினிமா அறிமுகத்துக்கு ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

நடிப்புத் திறமை
அவருக்கும் நடிப்பு ஆர்வம் அதிகமாக இருக்கிறது. அதற்காகத் தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார். நடிப்புத் திறமையை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை செய்து வருகிறார். அவர் நடிக்கும் படத்துக்கான கதையை சாய் மாதவ் புர்ரா எழுதி வருகிறார். இந்த வருடம் படப்பிடிப்பு தொடங்கும்.

நன்றாக அறிந்தவர்
அவரையும் ஆதரித்து ரசிகர்கள் ஆசி வழங்குவார்கள் என்று நம்புகிறேன். நான் போயபதி ஶ்ரீனு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை நன்றாக அறிந்தவர் அவர். இதில் சுவாரஸ்யமான கேரக்டரில் நடிக்கிறேன். மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் இருக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications











