குஷ்பு, ஷோபனா பின்னாடி நின்னு பாலகிருஷ்ணா என்ன பண்றாரு பாருங்க.. வரலட்சுமி ரிசப்ஷனில் நடந்த கலாட்டா!

சென்னை: நடிகர் சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமார் மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை நேற்று முன்தினம் திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்தை தொடர்ந்து ஜூலை 3ம் தேதியான நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட திருமண வரவேற்பு விழாவில் தென்னிந்திய பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

நடிகர் சரத்குமாருக்கு இந்திய அளவில் திரையுலக நண்பர்கள் உள்ளனர். அதேபோல அவரது மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதன் காரணமாக தனது திருமணத்திற்கு தென்னிந்திய பிரபலங்களையும் கலந்து கொள்ள அவர் அழைப்பிதழ் கொடுத்து அழைத்திருந்தார்.

Kushbhu Sundar Balakrishna Shobana

இந்நிலையில் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவுக்கு வருகை தந்த பாலகிருஷ்ணா, ஷோபனா, வெங்கடேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் நடிகை குஷ்புவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

80ஸ் நடிகர்கள் ரீயூனியன்: நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணத்தில் தனியாக 80ஸ் நடிகர்களின் ரீயூனியன் ஒரு பக்கம் அரங்கேறியது. அதன் புகைப்படங்களை தற்போது நடிகை குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 80களில் சினிமாவுக்கு வந்த பிரபலங்கள் அனைவரும் சென்னையில் படப்பிடிப்பு நடத்திய நிலையில், இன்னமும் அதே நட்பை தொடர்ந்து வருகின்றனர். ஆனால், சமீப காலமாக இளம் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அந்த நட்போடு இல்லாமல் அதிக ஈகோவுடன் இருப்பதாக கூறுகின்றனர்.

Kushbhu Sundar Balakrishna Shobana

திருமண வரவேற்பு விழா: வரலட்சுமி சரத்குமார் திருமணம் ஜூலை 2ம் தேதி நடைபெற்றது. இதுவரை திருமண புகைப்படங்களை வரலட்சுமி சரத்குமார் வெளியிடவில்லை. இந்நிலையில் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சியில் ஏகப்பட்ட தென்னிந்திய பிரபலங்கள் பங்கேற்றனர். சுரேஷ் கோபி, பாலகிருஷ்ணா, கிச்சா சுதீப், வெங்கடேஷ், ஷோபனா, குஷ்பு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சித்தார்த், கணேஷ் வெங்கட்ராமன், தமன் உள்ளிட்ட பல பிரபலங்கள் சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்கள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவை மனமாற வாழ்த்தினர்.

பாலகிருஷ்ணாவுடன் குஷ்பு, ஷோபனா: கல்கி 2898 ஏடி படத்தில் மரியம் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஷோபனா வரலட்சுமி சரத்குமார் திருமண விழாவுக்காக நேற்று சென்னை வந்த நிலையில் நடிகை குஷ்புவை சந்தித்தார். அப்போது, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் உள்ளிட்ட டோலிவுட் நடிகர்களும் சந்தித்து தனியாக ரீயூனியன் ஒன்றை நடத்தி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதிலும், குஷ்பு மற்றும் ஷோபனாவுக்கு பின்னாடி பாலகிருஷ்ணா நின்று கொண்டு ஷோபனாவை கலாய்ப்பது போல பரதநாட்டிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி வருகிறது.

Kushbhu Sundar Balakrishna Shobana

பாலகிருஷ்ணா தங்கச்சி: பாலகிருஷ்ணன் நடிப்பில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி படத்தில் வரலட்சுமி சரத்குமார் தங்கையாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். அந்த நட்பு காரணமாக வரலட்சுமி சரத்குமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா பங்கேற்றுள்ளார். சினிமா பிரபலங்களின் அணிவகுப்பாகவே நேற்று நடைபெற்ற ரிசப்ஷன் நிகழ்ச்சி களைகட்டியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X