அம்மாம்பெரிய காரை ஒரே எத்து.. ஒரு கிலோ மீட்டர் ரிவர்ஸ்ல போகுது.. திருந்தவே மாட்டீங்களா பாலய்யா?
ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
பாலய்யா படம் என்றாலே கயிற்றை போட்டு ஹெலிகாப்டரை இழுப்பது, விமானத்தை விட குதிரையில் வேகமாக செல்வது என தெலுங்கு ரசிகர்கள் ரொம்ப வருஷமாக பார்த்து பழகிப் போய் விட்டனர்.
ஆனால், இப்போதும் அதே பாணியை மாற்றமாட்டேன் என அடம்பிடிப்பது போல அம்மாம்பெரிய காரை ஒரே எத்தாக எத்தி ரிவர்ஸில் செல்ல வைக்கும் காட்சி தற்போது ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

ஹீரோவா? சூப்பர் ஹீரோவா?
இந்திய சினிமாவில் சூப்பர் ஹீரோ படங்கள் எடுக்காமல் ஹீரோக்களையே சூப்பர் ஹீரோக்களாக இயக்குநர்கள் காலம் காலமாக காட்டி வருகின்றனர். பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான அகண்டா திரைப்படத்தில் அவரை ஒரு அகோரியாக காட்டி சக்தி இருப்பது போல சித்தரித்து இருப்பார்கள். ஆனால், இன்று வெளியான வீரசிம்மா ரெட்டி படத்திலும் அதே போல சூப்பர் ஹீரோவாகவே அவர் ஏன் நடித்துள்ளார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

வீரசிம்மா ரெட்டி ரிலீஸ்
இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, ஸ்ருதிஹாசன், ஹனிரோஸ், வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள வீரசிம்மா ரெட்டி திரைப்படம் இன்று வெளியானது. சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் வீரசிம்மா ரெட்டி இடையே கடும் போட்டி நிலவி வருவதால் வாரிசு படத்தின் தெலுங்கு ரிலீஸ் நாளை தள்ளிப் போயுள்ளது.

ட்ரோலாகும் கார் சீன்
பாலகிருஷ்ணா படங்கள் என்றாலே லாஜிக் இல்லாத சண்டைக் காட்சிகள் இடம்பெறும் என்பது அனைவரும் அறிந்தது தான். தமன் பிஜிஎம் போட்டே நம்பமுடியாத காட்சிகளையும் நம்ப வைத்து விடுகிறார். இந்நிலையில், இன்று வெளியான பாலகிருஷ்ணா காரை எட்டி உதைக்கும் காட்சி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
காரை எட்டி உதைத்து
லாஜிக் என்பது எத்தனை கிலோ என கேட்கும் பாலய்யாவின் படங்களில் இதை விட மோசமான காட்சிகள் இருந்தாலும் இந்த வருஷத்துல இதுதான் ஃபர்ஸ்ட் டைம் என்பது போல ஒரே உதையில் காரை நகர்த்தும் அபத்தமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படியெல்லாம் மனிதர்கள் இருந்தால், பின்னர் ஏன் விபத்துகள் நடக்கிறது என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.

ஒரு கிலோ மீட்டருக்கு ரிவர்ஸ்
கார் ஒன்றும் சின்ன கார் எல்லாம் இல்லை.. பாலகிருஷ்ணாவின் பாடிக்கேற்றவாறு மிகப்பெரிய காரை தான் தனது காலால் எட்டி உதைக்கிறார். அந்த கார் அங்கேயே நிற்ககூட இல்லை. அதுபாட்டுக்கும் ரிவர்ஸில் ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்வது எல்லாம் ரொம்ப ஓவர்டா சாமி என நெட்டிசன்கள் மரண ட்ரோல் செய்து வருகின்றனர்.

வேண்டுமென்றே வைக்கிறாங்களோ
மாஸ் ஹீரோக்கள் படங்கள் என்றால் முதல் நாளில் தியேட்டரில் அவங்க என்ன செய்தாலும் ரசிகர்கள் விசிலடித்து கொண்டாடுவார்கள் என நினைத்து இயக்குநர்களும் இதுபோன்ற காட்சிகளை வேண்டுமென்றே வைக்கின்றனரோ என தெரியவில்லை. மாஸ் காட்சிகள் வைத்து படம் எடுக்க வேண்டும் என்றாலும், எத்தனை குண்டுகள் சுட்டாலும் ஒன்றும் ஆகாது என நினைத்தாலோ சூப்பர் மேன் படங்களை எடுத்து விடலாமே என்றும் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











