இந்த படத்துல மகள்.. அடுத்த படத்தில் மனைவி.. 22 வயது நடிகையை மடக்க பார்க்கும் 63 வயது நடிகர்!
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் அதிரடி மன்னன் பாலய்யா என செல்லமாக அழைக்கப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள பகவந்த் கேசரி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் இளம் நடிகை ஸ்ரீலீலா என இருவர் நடித்துள்ள நிலையில், பாலய்யாவுக்கு 22 வயதே ஆன ஸ்ரீலீலா ஜோடியா? என பலரும் கலாய்த்து வந்தனர்.

மகளாக நடித்துள்ள ஸ்ரீலீலா: தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக கலக்கி வருகிறார் ஸ்ரீலீலா. மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் ஜோடியாக நடித்து வரும் ஸ்ரீலீலா தெலுங்கில் 8க்கும் மேற்பட்ட படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். பாலய்யாவின் பகவந்த் கேசரி படத்தில் அவருக்கு மகளாக நடித்துள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பாலகிருஷ்ணா பேசிய பேச்சு ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்து வருகின்றன.
இந்த படத்தில் மகள் அடுத்த படத்தில் ஜோடி: 22 வயதே ஆகும் ஸ்ரீலீலா இந்தப் படத்தில் எனக்கு மகளாக நடித்துள்ளார். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் முழுவதும் மாமா மாமா என்று என்னை அழைத்து வந்தார். அடுத்த படத்தில் இவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
ஆனால், இந்த விருப்பத்தை என் மனைவி மற்றும் மகளிடம் சொல்லும்போது என் மகன் மோக்ஷக்னா, அப்பா நல்லாவே இருக்காது. ஸ்ரீலீலா உடன் நான் தான் ஜோடி போட்டு நடிக்கப் போகிறேன் எனக்கூறியதாக மேடையில் பேசி பலரையும் அதிர வைத்துள்ளார்.
குவியும் ட்ரோல்கள்: நடிகர் ரஜினிகாந்த் மீனாவுடன் ஜோடி போட்டு நடித்தது ஏகப்பட்ட ட்ரோல்களை அப்போவே சந்திக்க நேரிட்டது. சமீபத்தில், நடிகர் விஜய் சேதுபதி உப்பென்னா படத்தில் தனக்கு மகளாக நடித்த க்ரித்தி ஷெட்டியுடன் ஜோடி போட்டு நடிக்க மாட்டேன் என பேசியிருந்தது பாராட்டுக்களை பெற்றிருந்தது.
ஆனால், தற்போது பாலய்யா மகளாக நடித்த ஸ்ரீரெட்டி உடனே ஜோடி போட்டு நடிக்கப் போவதாக கூறியிருப்பது ஏகப்பட்ட ட்ரோல்களை குவித்து வருகிறது. ஆனால், சினிமாவை சினிமாவகத்தான் பார்க்க வேண்டும் என்றும் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் அம்மாவாகவும் ஜோடியாகவும் ஹனிரோஸ் நடித்திருந்தாரே என்றும் ரசிகர்கள் முட்டுக் கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











