அஜித்துக்கு மட்டுமில்லை.. பாலகிருஷ்ணா, ஷோபனாவுக்கும் பத்ம பூஷன்.. கொண்டாட்டத்தில் திரையுலகம்!

சென்னை: இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித் குமாருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் அஜித் குமாருக்கு மட்டுமின்றி மேலும், சில பிரபல நடிகர்களுக்கும் கலைத் துறையில் சிறந்து விளங்கியவர்கள் என்கிற அடிப்படையில் பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டாக்கு மகராஜ் படத்தின் மூலம் சங்கராந்திக்கு 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த பிரபல டோலிவுட் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கும் பத்ம பூஷன் விருதினை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மேலும், நடிகையும் நடன கலைஞருமான ஷோபனாவுக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ajith kumar padma bhushan balakrishna

தென்னிந்திய சினிமா பிரபலங்களுக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

பாலகிருஷ்ணாவுக்கு பத்ம பூஷன்: நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டதை போல தெலுங்கில் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. என்.டி. ராமராவின் மகனான 64 வயதாகும் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு அவரது கலைச் சேவைக்கு மரியாதை செலுத்தும் விதமாக பத்ம பூஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணா ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அவரது ஹாஷ்டேக்கை போட்டு வாழ்த்துக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேல் மிகப்பெரிய ஆளுமையாக இன்றும் பாலகிருஷ்ணா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் மகேஷ் பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் தற்போது ட்வீட் போட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஷோபனாவுக்கு விருது: பாலகிருஷ்ணாவை தொடர்ந்து நடிகை ஷோபனாவுக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் தளபதி முதல் இந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் வரை பல படங்களில் பிரம்மிப்பூட்டும் நடிப்பை வழங்கி வரும் நடிகை ஷோபனாவுக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சக நடிகைகளும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ajith kumar padma bhushan balakrishna

குவியும் வாழ்த்து: நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் அறிவிக்கப்பட்ட நிலையில், சிறுத்தை சிவா, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல பிரபலங்கள் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இதுவரை நடிகர்கள் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X