விசித்ராவுக்கு பாலய்யா கொடுத்த பாலியல் தொல்லை.. கமல் என்ன சொல்லப் போகிறார்.. செய்யாறு பாலு கேள்வி!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ள விசித்ராவுக்கு டோலிவுட்டின் முன்னணி நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா பாலியல் தொல்லை கொடுத்ததாக சர்ச்சை வெடித்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் பெயரை வெளிப்படுத்தாமல் நடிகை விசித்ரா சொன்ன கசப்பான பாலியல் தொல்லை சம்பவம் இந்த வாரம் பெரிய பஞ்சாயத்தை கிளப்பி உள்ளது.

Balakrishna who givest abuse torture to Vichitra at 20 years back revealed by Cheyyaru Balu

பிரதீப் ஆண்டனி இருக்கும் போது பெண்களுக்கு எதிரான குற்றத்தை வீட்டில் யார் செய்தாலும் சரி, நாட்டில் யார் செய்தாலும் சரி நான் கேள்வி கேட்பேன் என்ற கமல் சார் தன்னுடைய ஹீரோயின் த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் விசித்ரா சொல்லியிருக்கும் புகாருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும் செய்யாறு பாலு கேள்வி எழுப்பி உள்ளார்.

Balakrishna who givest abuse torture to Vichitra at 20 years back revealed by Cheyyaru Balu

பாலய்யாவின் பாலியல் லீலை அம்பலம்: நடிகை விசித்ரா பாலய்யா நடித்த Bhalevadivi Basu எனும் படத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த கசப்பான அனுபவத்தை விசித்ரா சொல்லிய நிலையில், அந்த படத்தின் ஹீரோ பாலகிருஷ்ணா தான் விசித்ராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக நெட்டிசன்கள் பாலகிருஷ்ணாவை போட்டு பொளந்து வருகின்றனர்.

இப்போதும் இளம் நடிகைகளுடன் நெருக்கமாக பாலகிருஷ்ணா அதே போன்ற சில்மிஷங்களை தான் செய்து வருகிறார் என ஸ்ரீலீலா, ஹனி ரோஸ் உள்ளிட்ட நடிகைகளுடன் பாலகிருஷ்ணா மேடைகளில் நடந்து கொண்ட வீடியோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

Balakrishna who givest abuse torture to Vichitra at 20 years back revealed by Cheyyaru Balu

செய்யாறு பாலு பகீர்: பாலகிருஷ்ணா தான் நடிகை விசித்ரா மறைமுகமாக பெயர் குறிப்பிடாமல் சொன்ன அந்த மோசமான நபர் என செய்யாறு பாலுவும் தற்போது வீடியோ வெளியிட்டு புட்டு புட்டு வைத்துள்ளார். அந்த படத்தில் நடிக்கும் போது முதல் நாளே விசித்ராவை தனது ரூமுக்கு பாலய்யா அழைத்ததாகவும் அதற்கு விசித்ரா வர மறுக்கவே தனது ஆட்களை வைத்து அவரது அறை கதவை இரவு முழுக்க தட்ட உத்தரவிட்டதாகவும், ஒரு சண்டைக் காட்சியில் தள்ளு முள்ளு சீன் எடுக்கும் போது, பலர் திடீரென விசித்ராவை கண்ட இடத்தில் தொட்டு சில்மிஷம் செய்யவும் பாலய்யா தான் உத்தரவிட்டார் என பகீர் கிளப்பி உள்ளார்.

Balakrishna who givest abuse torture to Vichitra at 20 years back revealed by Cheyyaru Balu

கமல் கேட்பாரா?: விசித்ரா இந்த வாரம் சொல்லியுள்ள அந்த பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தான் என சோஷியல் மீடியாவில் பலரும் குறிப்பிட்டு வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் இதுகுறித்து கேள்வி எழுப்புவாரா? என்றும் செய்யாறு பாலு கேட்டுள்ளார். த்ரிஷா, மன்சூர் அலி கான் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், பிக் பாஸ் இயக்குநர் விசித்ராவை வைத்து தனது பழைய கதையை சொல்ல சொல்லி இருப்பதே கமல் இந்த வாரம் அந்த டாபிக்கை எடுத்து பேசத்தானா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X