Akhanda 2 Box Office: 100 கோடி வசூலை கடந்ததா அகண்டா 2?.. 3 நாளில் பாலகிருஷ்ணாவின் பாக்ஸ் ஆபீஸ் தாண்டவம்!
ஹைதராபாத்: தமிழ்நாட்டில் ரஜினிகாந்தின் படையப்பா தான் கடந்த வாரம் பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டி வருகிறது. ஆனால், இந்திய சினிமாவை பொறுத்தவரை துரந்தர் மற்றும் அகண்டா 2 படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியுள்ளன.
டோலிவுட் திரைப்படமான அகண்டா 2 திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், முதல் நாளே ப்ரீமியர் உடன் சேர்த்து 59.5 கோடி வசூலை உலகளவில் ஈட்டியதாக 14 ரீல்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டது.

அனேகமாக இன்று 100 கோடி வசூல் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியளவில் அகண்டா 2 திரைப்படம் கடந்த 3 நாட்களில் செய்த வசூல் குறித்தும் உலகளவில் படத்தின் வசூல் குறித்து டிராக்கர்கள் வெளியிட்டுள்ள தகவல்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
பாலகிருஷ்ணாவின் தாண்டவம்: பாக்ஸ் ஆபீஸில் கடந்த 3 நாட்களாக பாலகிருஷ்ணாவின் தாண்டவம் தான் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. சிவன், அனுமான் உள்ளிட்ட கடவுள்களை காட்சிகளாக கொண்டு வந்து திரையில் காட்டிய நிலையில், ஏகப்பட்ட பக்தர்கள் அகண்டா 2 படத்தை 3டி மற்றும் 2டியில் பார்த்து கூஸ்பம்ப்ஸ் ஆகி வருகின்றனர். படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் குவிந்தாலும், வசூலில் முதல் 3 நாட்கள் தங்கு தடையின்றி பாலகிருஷ்ணாவின் டாமினேஷன் இருந்தது.

அகண்டா 2 இந்திய வசூல்: போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா, சம்யுக்தா மேனன், ஆதி, ஹர்ஷாலி மல்கோத்ரா, கபிர் சிங் துஹான் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியான அகண்டா 2 திரைப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் இந்தியளவில் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இதுவரை அகண்டா 2 திரைப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 30.5 கோடி (ப்ரீமியர் உடன் சேர்த்து) வசூலையும், 2வது நாள் சனிக்கிழமை 15.5 கோடி வசூலும், 3வது நாளான ஞாயிற்றுக்கிழமை 15 கோடி வசூல் என ஒட்டுமொத்தமாக 61 கோடி வசூலை அள்ளி உள்ளது.
100 கோடி வசூல் ஈட்டியதா?: இதுவரை டிராக்கர்களின் அறிவிப்புப்படி ஓவர்சீஸில் சுமார் 30 கோடி வசூலை அகண்டா 2 திரைப்படம் அள்ளியுள்ளது. ஒட்டுமொத்தமாக 91 கோடி வசூலை அகண்டா 2 இதுவரை அள்ளியிருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 14 ரீல்ஸ் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு டாக்கு மகராஜ் படத்தைத் தொடர்ந்து பாலகிருஷ்ணாவின் இன்னொரு 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படமாக அகண்டா 2 மாறிவிடும்.


Click it and Unblock the Notifications











