பெத்த அப்பாவாகவே இருந்தாலும்.. பாலய்யா நடத்தும் Bad Touch பாடம்.. க்ரிஞ்சுக்கு நடுவே கருத்து!
சென்னை: பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், ஸ்ரீலீலா நடிப்பில் லியோவுக்குப் போட்டியாக வெளியான பகவந்த் கேசரி திரைப்படம் தற்போது ஓடிடியிலும் லியோவுக்கு போட்டியாக ரிலீஸ் ஆகி உள்ளது.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் லியோ வெளியான நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பகவந்த் கேசரி வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் க்ரிஞ்சு காட்சிகளை ஷேர் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வரும் நிலையில், அந்த படத்தில் இப்படியொரு நல்ல சீனும் இருக்கு என பாலய்யா ரசிகர்கள் இந்த குட் டச் மற்றும் பேட் டச் காட்சிகளை ஷேர் செய்து வருகின்றனர்.
சித்தா: சித்தார்த்தின் சித்தா படத்தில் உறவின் அர்த்தத்தை சொல்லி உள்ளனர். அந்த படத்திலும் அந்த சிறுமியின் அம்மா குட் டச், பேட் டச் பற்றி மகளுக்கு சொல்லும் போது தவறான இடங்களில் யார் கை வைத்தாலும் அம்மா கிட்ட சொல்லிடணும், தொடாதீங்கன்னு கத்தணும்னு சொல்லித் தருவார். சித்தாவா இருந்தாலும் கத்தணுமாம்மான்னு அந்த பொண்ணு கேட்க ஆமாம் என அம்மா சொல்லி முடிக்கும் போது சித்தார்த்தின் என்ட்ரியும் அவர் பார்வையில் இருக்கும் வலியும் சாட்டையடியாக இறங்கும். ஆனால், சிறுமிகளுக்கு அதிகமான பாலியல் தொல்லைகள் வருவதே உறவினர்களால் தான் என அதே சித்தப்பா கதாபாத்திரத்தை சுழல் வெப்சீரிஸில் வில்லனாக மாற்றியிருப்பார்கள்.
அப்பாவாகவே இருந்தாலும்: பள்ளியில் சிறும் ஒருவருக்கு சாக்லேட் கொடுத்து பேட் டச் செய்வதாக புகார் வந்ததை அறிந்ததும் பாலகிருஷ்ணா ஸ்டேஜ் ஏறி இன்னைக்கு நான் ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன் என பேச ஆரம்பிக்கிறார். பெண் குழந்தைகளின் நெஞ்சில், இடுப்புக்கு கீழ் மற்றும் கால்களுக்கு நடுவே யாரும் கை வைக்கக் கூடாது, அப்படி செய்தால் அம்மா கிட்ட சொல்லணும் என பாலய்யா சொல்கிறார். பெத்த அப்பாவாகவே இருந்தாலும் அம்மாகிட்ட சொல்லணும்னு வசனம் பேசுகிறார். அந்த வீடியோவை தான் தற்போது பாலய்யா ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
தாயுமானவன்: பல வீடுகளில் அம்மா இல்லாத பெண் குழந்தைகளை அப்பாவே வளர்ப்பது எல்லாம் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. பாலய்யாவின் பகவந்த் கேசரி படத்திலும் அவருக்கு மகளாக ஸ்ரீலீலாவை காட்டியிருப்பார்கள். அந்த பெண்ணை அவர் எப்படி வளர்த்து இருப்பார் என்கிற கேள்வியையும் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். தவறான நோக்கத்தில் தொடுவதை எதிர்த்து குழந்தைகள் குரல் கொடுக்க கத்துக் கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு குழந்தைகளுக்கே புரியாத வகையில் சொல்லித் தந்து எந்தவொரு பயனும் இல்லை என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். விசித்ரா, ராதிகா ஆப்தே விவகாரத்தில் சிக்கி பாலய்யா இந்த பாடம் சொல்வது வேடிக்கையாக உள்ளது என்றும் நெட்டிசன்கள் நக்கலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











