ஹீரோவாக அறிமுகமாகும் சூப்பர் ஸ்டாரின் மகன்.. அப்பாவுக்கே டஃப் கொடுப்பாரு போல!
சென்னை: தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாதமுனி பாலகிருஷ்ணாவின் மகன், கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இவர் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் டிரெண்டான நிலையில், இவர் அப்பாவிற்கே டஃப் கொடுப்பாரு போல என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
கிட்டதட்ட 40 வருடங்களாக தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நந்தமுரி பாலகிருஷ்ணா. தனது 64 வயதிலும் கூட இளம் கதாநாயகர்களே வாயை பிளக்கும் அளவிற்கு ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி வருகிறார். ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பாலகிருஷ்ணாவை ரசிகர்கள் செல்லமாக பாலைய்யா என அழைத்து வருகின்றனர்.

நடிகர் பாலகிருஷ்ணா: மறைந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மற்றும் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவின் 6வது மகன் தான் இந்த பாலகிருஷ்ணா. இவர் 1974ஆம் வெளியாக Tatamma Kala என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பல வெற்றிப்படத்தில் நடித்து முன்னணி ஹீரோவானார். இவர்,அறுபத்தி நான்கு வயதை கடந்த போதும், சண்டை காட்சிகளில் இவருக்கு என்று தனி ஸ்டைலை வைத்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல், இளம் நடிகையான ஸ்ருதி ஹாசன், காஜல் அகர்வால், ஹனி ரோஸ் ஆகியோருக்கு ஜோடியாக அடித்து, ரொமான்ஸ் காட்சிகளில் கலக்கி வருகிறார்.
அதிரடி ஆக்ஷன்: சிங்கம் படத்தில் வரும் ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா ...பாக்குறியா...பாக்குறியா என்று, சூர்யா காரை ஓங்கு ஒரு அடி அடிப்பார்... கார் அப்படியே அப்பளம் போல நொறுங்கிவிடும். இதைப்பார்த்த நமக்கு, இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு, என்ன கொடுமை சார் என்று சொல்லத்தோன்றும். ஆனால், பாலகிருஷ்ணா , கார் என்னடா காரு.... நான் அடிக்கிறேன் பாரு என்று, கப்பலையை கையால் அடிச்சு சுத்தவிடுவாரு, இதைப்பார்த்து தமிழ் ரசிகர்கள் ட்ரோல் செய்தாலும், தெலுங்கு ரசிகர்கள் விசில் அடித்து இவரின் அலப்பறையை பார்த்து ரசிப்பார்கள்.

அப்பாவிற்கே டஃப்: அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கும் இவர் ஆந்திர சட்டப் பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஹிந்துபூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகவும் தேர்வாகி உள்ளார். சினிமா, அரசியல் என ரவுண்டு கட்டி செயல்பட்டு வரும் பாலகிருஷ்ணாவின் மகன், நந்தமுரி மோக்ஷக்னா தேஜாவும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் உருவாக உள்ள சிம்பா படத்தில், மோக்ஷங்கா தேஜா ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
இன்று மோஷங்கா தேஜாவின் பிறந்த தினம் என்பதால், படத்தின் போஸ்டரை வெளியிட்டு படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. அந்த போஸ்டரில்,மோக்ஷங்கா தேஜா அப்பாவிற்கே டஃப் கொடுக்கும் வகையில் சும்மா அட்டகாசமாக இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











