Vijay - விஜய்க்கு ஹீரோயினாகும் வாய்ப்பு.. அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு மறுத்ததால் பறிபோனதா?.. நடிகை பகீர்
சென்னை: Balambika (பாலாம்பிகா) அட்ஜெஸ்ட்மெண்ட் செய்திருந்தால் விஜய்க்கும், பிரசாந்த்துக்கும் ஹீரோயினாக நடித்திருக்கலாம் என்று நடிகை பாலாம்பிகா தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் காலங்காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நடிகைகளை போட்டு படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களின் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் வேறு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால் இப்போதைய காலம் வரை இது தீர்ந்தபாடில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

உண்மை சொல்லும் ஹீரோயின்கள்: அட்ஜெட்ஸ்ட்மெண்ட்டால் தாங்கள் சந்திக்கும் கொடுமை குறித்து நடிகைகள் வெளியில் பேசுவது அரிதிலும் அரிதுதான். ஆனால் சமீபகாலமாக தைரியமாக அனைத்தையும் பேசிவருகின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவிடம்கூட அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கான அப்ரோச் போயிருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார். அதேபோல் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் தனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இப்படி பல நடிகைகள் ஓபனாக பேசிவருகின்றனர். அந்தவகையில் நடிகை பாலாம்பிகாவும் இதுகுறித்து பேசியிருக்கிறார்.
பாலாம்பிகா: பழம்பெரும் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் உதவியாளராக இருந்த ராமசாமி என்பவரின் மகள் பாலாம்பிகா. தனது மகளை எப்படியாவது பெரிய ஹீரோயினாக்கிவிட வேண்டுமென்பதில் தந்தை முனைப்போடு இருக்க பாலம் என்ற படத்தில் முரளிக்கு தங்கையாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகன் படத்தில் குஷ்பூவுக்கு தங்கை, பாட்டுக்கு ஒரு தலைவன் படத்தில் விஜயகாந்த்துக்கு, திருமதி பழனிச்சாமி படத்தில் சத்யராஜுக்கு தங்கை என பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு தங்கையாக நடித்திருக்கிறார்.
ஹீரோயின் டூ சீரியல்: அதேபோல் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கும் அவருக்கு ஒருகட்டத்தில் வாய்ப்பு குறைய சீரியல் பக்கம் தலைகாட்டினார். அந்தவகையில் நாதஸ்வரம், பிரியமானவள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்தும் தனது திரையுலக வாழ்க்கை குறித்தும் பகிர்ந்திருந்தார்.
அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் விஜய்க்கு ஹீரோயின்: அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நான் நடித்துக்கொண்டிருக்கும்போது எனக்கு விஜய், பிரசாந்த் உள்ளிட்டோருடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. ஆனால் அந்தப் படங்களில் நடிக்க வேண்டுமென்றால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவானது. அதில் உடன்பாடு இல்லாததால் எனது அப்பா, அப்படி ஒன்றும் நீ நடிக்க வேண்டாம் என கறாராக சொல்லிவிட்டார். நான் ஒருவேளை விஜய்யோடு நடித்திருந்தால் எனது வாழ்க்கையே மாறியிருக்கும்.
உதவிய சத்யராஜ்: நான் பல நாடுகளுக்கு சுற்றியிருக்கிறேன்.நன்றாக சம்பாதித்தபோது கொஞ்சம் அதிகமாகவே ஆடிவிட்டேன்.அதனால் அனைத்தையும் இழந்துவிட்டேன். எனது திருமண வாழ்க்கையும் ஒழுங்காக இல்லை. தினமும் குடித்துவிட்டுத்தான் எனது கணவர் வருவார். ஒருமுறை எனது மகனை டாஸ்மாக்கிற்கு போக சொன்னார். அப்போதிருந்து எனது திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்துவிட்டேன்.
கொரோனா சமயத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அப்போது சத்யராஜை தொடர்புகொண்டு உதவி கேட்டேன். அவரும் வீட்டுக்கு வர சொல்லி 20,000 ரூபாய்க்கான காசோலையை கொடுத்து உதவினார். விஜயகாந்த்தை என்னால் நெருங்கவே முடியவில்லை. " என்றார்.


Click it and Unblock the Notifications