Vanangaan - யப்பா எத்தனை பிரச்னைகள்.. ஒரு வழியாக வணங்கான் ஓவர்.. இதோ புதிய அப்டேட்

சென்னை: Vanangaan (வணங்கான்) பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தின் ஷூட்டிங் முடிந்து அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கியிருக்கின்றன.

தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே மாறுபட்ட கதைக்களத்தில் நடப்பதாகவும்; இதுவரை நாம் கண்டுகொள்ளாத மனிதர்களை பற்றி பேசுவதாகவும் இருக்கும். அவரது இயக்கத்தில் கடைசியாக வர்மா படம் வெளியானது. அர்ஜுன் ரெட்டி ரீமேக்கான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது.

Balas Vanangaan Movie Dubbing Works Starts From yesterday

சறுக்கிய பாலா: பாலாவுக்கு கடந்த சில வருடங்களாகவே நன்றாக இல்லை. தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா என வரிசையாக அவர் இயக்கிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பலத்த அடி வாங்கின. இது ஒருபக்கம் இருக்க அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரிய பிரச்னை ஒன்று ஏற்பட்டது. அதேபோல் அவருக்கு நெருக்கமான விக்ரமும், சூர்யாவும்கூட பாலாவிடமிருந்து கழன்று கொண்டனர்.

வெளியேறிய சூர்யா: உச்சக்கட்டமாக சூர்யாவுக்கு நந்தா படத்தின் மூலம்தான் பெரிய பெயர் கிடைத்தது. அதிலிருந்துதான் சூர்யா ஒரு நடிகர் என்றே அங்கீகரிக்கப்பட்டார். அப்படிப்பட்ட சூர்யா பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் கமிட்டானார். ஒரு ஷெட்யூல் முடித்த அவர் இரண்டாவது ஷெட்யூல் நடக்கவிருந்த சூழலில் படத்திலிருந்து வெளியேறிவிட்டார். இது பாலாவுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியிருக்கும்.

அசராத பாலா: அதேசமயம் பாலா பல போராட்டங்களை சந்தித்தவர் என்பதால் இதனை கண்டு அசரவில்லை. கதை மீது நம்பிக்கை வைத்திருந்த அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மற்றும் சுரேஷ் காமாட்சியின் துணையுடன் படத்தின் வேலைகளை தொடர்ந்தார். அதன்படி ஹீரோவாக அருண் விஜய் நடிக்கிறார். ரோஷினி பிரகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஷூட்டிங் ஓவர்: படத்திலிருந்து சில மாதங்களுக்கு முன்னர் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் அருண் விஜய் உடல் முழுக்க சேறுடன் ஒரு கையில் பிள்ளையார், மறு கையில் பெரியார் சிலைகளுடன் இருந்தார். அது பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்த சூழலில் விறுவிறுப்பாக நடந்துவந்த ஷூட்டிங் முடிந்திருக்கிறது. அடுத்ததாக படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியிருக்கின்றனர்.

நேற்று வணங்கான் படத்திற்கான டப்பிங் பணிகள் பூஜை போட்டு தொடங்கப்பட்டன. இயக்குநர் மிஷ்கினும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நேற்று அவர் உட்பட மற்றும் சிலர் படத்தில் தங்களது போர்ஷனுக்கான டப்பிங்கை கொடுத்ததாக தெரிகிறது. அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகின.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X