பாலா எடுத்த அதிரடி முடிவு?.. விக்ரமுடன் மோதுகிறாரா?.. எல்லாத்துக்கும் அதுதான் காரணமா?

சென்னை: சியான் விக்ரமுக்கு அவரது திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை தந்த படம் என்றால் அது சேது. அப்படம் ரிலீஸாகும்வரை சினிமாவில் தனக்கான இடத்துக்காக கடுமையாக போராடிக்கொண்டிருந்தார். விக்ரமின் திரை வாழ்க்கை சேதுவுக்கு முன் சேதுவுக்கு பின் என்றுதான் பிரிக்கப்பட வேண்டும். பாலா இப்போது வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தச் சூழலில் வணங்கான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. குறிப்பாக சியான் விக்ரமுக்கு சினிமாவில் நிலையான இடத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படம்தான் பாலாவுக்கும் சரி விக்ரமுக்கும் சரி நல்ல வாழ்க்கைக்கான கதவை திறந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Bala Vikram Vanangaan Thangalaan

நந்தா: சேது படத்தை குறிஞ்சி மலர் என்று ஏகத்துக்கும் கொண்டாடினார்கள் விமர்சகர்களும், ரசிகர்களும். ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்ற அவருக்கு இரண்டாவது பட வாய்ப்பும் உடனடியாக கிடைத்தது. அதன்படி அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். அந்தப் படமும் நல்ல ஹிட்டாகி காலங்கடந்து பேசப்படும் படைப்பாக மாறி நிற்கிறது. சூர்யாவுக்கும் நல்ல பெயரை அந்தப் படம்தான் பெற்றுக்கொடுத்தது.

என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்: முதல் இரண்டு படங்களிலேயே முக்கியமான இயக்குநர் என்று பாலா பெயர் எடுத்தார். அடுத்தடுத்து அவர் இயக்கிய பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களும் மிகச்சிறந்த படைப்பாக இருக்கின்றன. அதிலும் பாலா சொன்னால் நடிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற நிலைதான் சினிமாவில் இருந்தது. அவரது இயக்கத்தில் ஓரிரு காட்சிகளிலாவது தோன்றிட வேண்டும் என நடிகர்கள் தவம் இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது அவர் வணங்கான் திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

நொந்த பாலா: பாலாவின் திரை வாழ்க்கை இப்போது ஒரு ஹிட்டுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது. ஒருபக்கம் பெர்சனல் வாழ்க்கையும் பிரச்னையிலேயே இருக்கிறது. தனது மனைவி மலரை விவாகரத்து செய்த அவருக்கு; இன்னொரு இடியாக இறங்கியது என்றால் வர்மா திரைப்படம். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்கான அதில்தான் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமானார். தனக்கு எப்படி பாலாவின் சேது மூலம் அடையாளம் கிடைத்ததோ அதேபோல் தனது மகனுக்கும் அடையாளம் வேண்டும் என விக்ரம் நினைத்தார். ஆனால் பாலா எடுத்த வர்மா பிடிக்காததால் அதை தூக்கிப்போட்டுவிட்டு வேறு ஒரு இயக்குநரை வைத்து எடுத்தார்கள். இது பாலாவுக்கு பெருத்த அவமானமாகவே கருதப்பட்டது.

முடிவெடுத்த பாலா: எனவே வணங்கான் திரைப்படம் பாலாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் வணங்கான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, ஆகஸ்ட் 15ஆம் தேதி வணங்கான் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம். அதேநாள்தான் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் படமும் ரிலீஸாகிறது. எனவே வணங்கான் அன்றைய நாளில் ரிலீஸ் ஆகும்பட்சத்தில் பாலா Vs விக்ரம் என்ற போட்டியாக இருக்கும்; அதற்கு காரணம் வர்மா படம்தான். இதில் பாலா பந்தயம் அடித்து தன்னை நிரூபித்து; அவமானப்படுத்தியவர்களுக்கு பாடம் புகட்டுவார் என்று அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X