Vanangaan: KDM பிரச்சனை.. இன்று வெளியாகுமா வணங்கான்.. 3 காட்சிகள் ரத்து..ரசிகர்கள் கவலை!

சென்னை: பாலாவின் இயக்கத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகி உள்ள திரைப்படம் தான் வணங்கான். அருண்விஜய்,சமுத்திரக்கனி, மிஷ்கின், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை பாலாவுடன் இணைந்து சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இன்று காலை 9 மணிக்கு தியேட்டரில் வெளியாக இருந்த இப்படம், KDM பிரச்சனை காரணமாக இன்னமும் பல திரையரங்குகளில் FDFS ஆரம்பிக்கவில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் பாலா 2018 ம் ஆண்டு ஜோதிகாவை வைத்து நாச்சியார் என்ற படத்தை எடுத்திருந்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட 6 வருடங்களாக பாலா படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதையடுத்து, வணங்கான் படத்தில் சூர்யா நடிப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, வணங்கான் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த நிலையில், படத்தில் இருந்து சூர்யா வெளியேறினார். இதனால், வணங்கான் படம் டிராப்பாகி விட்டதாக சொல்லப்பட்ட நிலையில், அந்த படத்தில் சூர்யாவிற்கு பதில் அருண்விஜய் கமிட்டானார்.

bala vanangaan kdm issue

KDM பிரச்சனை : இதைத்தொடர்ந்து சூர்யாவை எடுத்த அனைத்து காட்சிகளையும் அருண்விஜயை வைத்து மீண்டும் எடுக்கப்பட்டு, வணங்கான் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த நிலையில் வணங்கான் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், KDM பிரச்சனை காரணமாக இன்னமும் திரையரங்குகளில் FDFS ஆரம்பிக்கவில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்கள் கவலை: ஒரு வழியாக படம் வெளியாகப் போகிறது அதனை பார்த்து தியேட்டரை தெறிக்கவிடலாம் என மகிழ்ச்சியோடு தியேட்டர் வாசலில் பட்டாசு வெடித்து ரசிகர்கள் தயாராக இருந்த நிலையில், KDM பிரச்சனை என்றும், அது முடிந்ததும் படத்தை போடுவோம் பொறுமையா இருங்க என தியேட்டர் ஓனர்கள் சொல்ல ரசிகர்கள் டென்ஷனாகி உள்ளனர். காலை 9 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய ஷோ 11 மணி ஆகியும் படத்தை போடவில்லை. 9, 10 மற்றும் 10.30 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 12மணிக்குள் இந்த பிரச்சை முடியவில்லை என்றால், படம் இன்று வெளியாகாது என்று சொல்லப்படுகிறது.

KDM என்பது KDM - Key Delivery Message ஆகும். அதாவது, தியேட்டரில் படத்தை க்யூப் எனும் சாட்டிலைட் முறையில் திரையிடுவதற்கான encrypted கோட் ஆகும். இது திரையரங்குகளுக்கு கொடுக்கப்பட்டால் தான் படம் ரிலீசாகும். இந்த கோட் வராததால் தான் கடைசி நேரத்தில் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X