twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொக்கி குமாருக்கே இவர் தான் டான்.. பாலாசிங்கின் அந்த ’விருமாண்டி’ நடிப்பெல்லாம் வேற லெவல்!

    |

    Recommended Video

    Actor Bala Singh passed away | நடிகர் பாலா சிங் காலமானார்.

    சென்னை: பிரபல குணசித்திர நடிகர் பாலாசிங், உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 67. பாலாசிங்கின் மறைவு திரைத்துறையினரையும் சினிமா ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

    நாடக நடிகரான பாலாசிங், நடிகர் நாசருடன் நெருங்கிய நட்பு கொண்டவர். நாசர் நாயகனாக நடித்த அவதாரம் படத்தில் நடித்த பாலாசிங்கின் நடிப்பை பாராட்டிய கமல், விருமாண்டி, இந்தியன் என பல படங்களிலும் பாலாசிங்கை நடிக்க வைத்தார்.

    செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை மற்றும் என்.ஜி.கே படங்களில் ஹீரோவுக்கு அடுத்த படியான வெயிட்டான ரோலில் பாலாசிங் நடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் பாலா சிங் காலமானார்.. திரைத்துறையினர் அதிர்ச்சி!உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் பாலா சிங் காலமானார்.. திரைத்துறையினர் அதிர்ச்சி!

    கொக்கி குமாருக்கே டான்

    புதுப்பேட்டை படத்தில் கொக்கி குமாராக நடிகர் தனுஷ் சாதாரண மனிதன் எப்படி ரவுடி ஆகிறான் என்பதையும், ஒரு ரவுடிக்கும் உள்ளுக்குள் எப்படி பயம் இருக்கும் என்பதையும் செல்வராகவன் பக்காவாக படம் பிடித்துக் காட்டியிருந்தார். அந்த படத்தில், கொக்கி குமாருக்கு டானாக பாலாசிங் தனது நடிப்பால் மிரட்டியிருப்பார். வறியா வறியா பாடலில் ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்' என பாலாசிங் போடும் நடனம், இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானது.

    என்.ஜி.கே சகுனி

    என்.ஜி.கே சகுனி

    என்.ஜி.கே படத்தில் பாலாசிங்குக்கு மகாபாரதத்தில் வரும் சகுனி போன்ற கதாபாத்திரத்தை செல்வராகவன் வடிவமைத்திருப்பார். சூர்யாவை அரசியலுக்கு கொண்டு வர பாலாசிங் செய்யும் பல தகிட தத்த வேலைகள் படத்தின் நீளத்தால் வெட்டப்பட்டு, அவருக்கான பவர் படத்தில் குறைந்தது தான் என்.ஜி.கே படம் கலவையான விமர்சனங்களை சந்திக்க காரணமாக இருந்தது.

    செல்வராகவன் இரங்கல்

    திரைத்துறையில் நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்ததாக பாலாசிங்கை முறையாக பயன்படுத்திய இயக்குநர் என்றால் அது செல்வராகவன் தான். பாலாசிங்கின் மறைவு செய்தியை அறிந்த செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், நல்ல நடிகரையும், நல்ல நண்பரையும் இழந்துவிட்டேன் என இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சூர்யா ரசிகர்கள் இரங்கல்

    சூர்யாவின் நடிப்பில் இறுதியாக வெளியான என்.ஜி.கே திரைப்படத்தில் பாலாசிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சூர்யாவை கொஞ்சம் கொஞ்சமாக அரசியல்வாதியாக பாலாசிங் தான் மாற்றுவார். ஒரு கட்டத்தில் பாலாசிங்கை விட சூர்யா மிஞ்சி அசத்தும் வேளையில் பாலாசிங்கின் அந்தர்பல்டி நடிப்பு தியேட்டர்களில் கைதட்டல்களை பெற்றது. இந்நிலையில், பாலாசிங்கின் மறைவுக்கு சூர்யா ரசிகர்கள் என்.ஜி.கே காட்சிகளை பதிவிட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Read more about: bala singh died
    English summary
    Noted Tamil actor and theatre artist Balasingh died here on Wednesday following brief illness, the South Indian Artistes' Association said.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X