இளையராஜா இசையில் பால்கியின் புதிய படம்... அமிதாப்- தனுஷ் இணைகிறார்கள்!

By Shankar

பாலிவுட் இயக்குநர் பால்கி, மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் புதிய படத்தில் அமிதாப் பச்சனும் தனுஷும் இணைகிறார்கள். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இந்தியில் 'பா', 'சீனி கம்' என வித்தியாசமான படங்களைத் தந்தவர் பால்கி. தனது இரண்டு படங்களிலும் பாலிவுட்டின் சாதனை நாயகன் அமிதாப்பை ஹீரோவாக வைத்து இயக்கினார். இந்த இரு படங்களுக்கும் இசையமைத்தவர் இளையராஜா.

தயாரிப்பில் பிஸி

தயாரிப்பில் பிஸி

2009-ம் ஆண்டுக்குப் பிறகு எந்த படங்களையும் இயக்கவில்லை பால்கி. மனைவி இயக்கிய இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் தயாரிப்புப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

இளையராஜா

இளையராஜா

பால்கி தற்போது இந்தியில் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திலும் அமிதாப்பச்சன் - இளையராஜாவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

தனுஷுக்கு பெருமை

தனுஷுக்கு பெருமை

இந்தக் கூட்டணியில் புதிதாக இணையவிருப்பவர் தனுஷ். இந்தியில் ‘ராஞ்சனா' வெற்றிக்குப் பிறகு தனுஷ் நடிக்கு படம் இது. இரண்டாவது படத்திலேயே ஒரு சாதனை நடிகருடன் இணைவது தனுஷுக்கு புதிய பெருமையைச் சேர்த்துள்ளது.

ஷாருக்கானுக்கு தரவிருந்த வேடம்

ஷாருக்கானுக்கு தரவிருந்த வேடம்

இப்படம் தனுஷுக்கு ஒரு மறக்க முடியாத படமாக இருக்கும் எனும் அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் உள்ள வேடம் என்கிறார்கள். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பரிசீலிக்கப்பட்டவர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிசி ஸ்ரீராம்

பிசி ஸ்ரீராம்

பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். பால்கியின் படங்களுக்கு இவர்தான் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். இப்படத்தில் நடிக்கும் பிற கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X