'தல... பாத்து பண்ணிவிடு தல..!' - எச்.ராஜாவை கூப்பிட்டு ஒரண்டையிழுத்த இயக்குநர்!
சென்னை: 'மெர்சல்' படத்திற்கு இலவசமாக விளம்பரம் செய்ததைப் போல எங்கள் படத்திற்கும் ப்ரொமோஷன் செய்யவேண்டும் என எச்.ராஜாவிடம் கேட்டிருக்கிறார் 'பலூன்' பட இயக்குநர் சினிஷ்.
சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகிவரும் படம் 'பலூன்'. இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை 70 எம்.எம் நிறுவனம் தயாரிக்க, ஆரோ சினிமாஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
ப்ரொமோஷனுக்கு காசு இல்ல
' 'பலூன்'ன்னு ஒரு படம் பண்ணி வெச்சிருக்கேன். ப்ரொமோஷனுக்கு காசு இல்ல... கொஞ்சம் பாத்து பண்ணிவிடுங்க சார்' என எச்.ராஜாவை மென்சன் செய்து ட்வீட் தட்டியிருக்கிறார் இயக்குநர் சினிஷ்.
இவ்வளவு ஆகாது
யோவ்... ஆனாலும் உனக்கு இவ்வளவு இருக்கக்கூடாது... ஹா ஹா ஹா..!
ஜி.எஸ்.டி காட்சி
ஜி.எஸ்.டி-ல பலூன் வெடிக்கிற மாதிரி ஒரு சீன் வைங்க. ஃப்ரீ ப்ரொமோஷன் கன்ஃபார்ம்!
பாத்து பண்ணி விடு தல
அவரிருக்க பயமேன்... தல பாத்து பண்ணி விடு தல..!
புது பிசினஸ்
இது புது பிசினஸாவுல இருக்கு. எப்படியோ, மொத்தத்துல இந்த ஊர் நம்மளைப் பத்திதான் பேசனும். ஆமா வேற எதற்காவது விளம்பரம் பன்னணுமா..?
மேல இருக்கிறவன்
'எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்.' என ஒருவர் பா.ஜ.க-வினரை கலாய்த்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











