குடித்துவிட்டு அட்டூழியம் செய்தார், பெருநஷ்டம் ஏற்படுத்தினார்: ஜெய் மீது விஷாலிடம் புகார்

By Siva

Recommended Video

ஜெய் பற்றி விஷாலிடம் புகார் செய்த தயாரிப்பாளர்கள் !!- வீடியோ

சென்னை: பலூன் திரைப்பட நஷ்டம் தொடர்பாக ஜெய் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடித்த பலூன் படம் அண்மையில் வெளியானது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் கே. நந்தகுமார், டி.என். அருண் பாலாஜி சார்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,

ரிலீஸ்

ரிலீஸ்

எங்களது பலூன் திரைப்படம் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி படப்பிடிப்பு துவங்கி டிசம்பர் 29, 2017 வெளியாகி தற்போது திரையரங்கில் ஓடிக் கொண்டு இருக்கிறது. இப்படத்தை நாங்கள் 2017ம் ஆண்டு ஜனவரி மாதமே வெளியிட திட்டமிட்டோம். ஆனால் அது முடியாமல் 9 மாதங்கள் கழித்து டிசம்பரில் வெியாக முக்கியமான காரணம் நடிகர் ஜெய்.

டேட்ஸ்

டேட்ஸ்

2016ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய பலூன் திரைப்படம் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிரு்த நிலையில் ஜெய் படத்திற்காக தேதிகளை சரிவர கொடுக்காமலும், படப்பிடிப்பிற்கு வராமலும், சரியாக எங்களுக்கு ஒத்துழைக்காமலும் இருந்ததால், படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பருக்கு தள்ளிப்போனது. பின்னர் செப்டம்பர் ரிலீஸ் வேளையில் இருந்தபோது, 'டப்பிங்'க்கு கூட அவர் வராமல் எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதால், எங்களால் படப்பிடிப்பை தொடர முடியாமல் பல லட்சம் வரை நஷ்டம் ஆனது.

பேக்கப்

பேக்கப்

படப்பிடிப்பின் போது, தினமும் குடித்துவிட்டு தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வருவார். வந்ததும் எப்போ பேக்கப் ஆகும், எப்போ மீண்டும் ஹோட்டல் ரூம் சென்று குடிக்கலாம் என்ற எண்ணத்திலேயே இருந்து, நடிப்பில் சரியாக கவனம் செலுத்தாமல், ஒரு வகையான மெத்தனப்போக்குடன் நடந்து கொள்வார். ஒவ்வொரு முறையும் கேரவனில் இருந்து வெளியே வர ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும். 8 மணிநேரம் ஷூட்டிங் செய்ய திட்டமிட்டால், இவரை வைத்து 4 மணிநேரம் ஷூட்டிங் செய்வதே பெரிய போராட்டமாய் சென்று முடியும். அவர் வசதிக்கு எவ்வித குறைகளும் இல்லாமல் பார்த்துக் கொண்ட எங்களுக்கு அவர் மிகுந்த மன உளைச்சலையும், பொருள் நஷ்டத்தையும் மட்டுமே ஏற்படுத்தினார்.

அஞ்சலி

அஞ்சலி

அவரின் இந்த தவறான நடவடிக்கையை நாங்களும், படத்தின் இயக்குனர் சினிஷும் சுட்டிக்காட்டினோம். அதில் கோபம் அடைந்து, அந்த காழ்ப்புணர்ச்சியை மனதில் கொண்டு தான், அஞ்சலிக்கு உடம்பு சரியில்லை என்று நாடகம் ஆடி கொடைக்கானலில் இருந்து மிச்ச படப்பிடிப்பு முடித்துக் கொடுக்காமல் வெளியேறினார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அதை எங்கு வேண்டுமானாலும் சமர்பிக்க தயாராக உள்ளோம். இதனால் எங்களுக்கு 30 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது.

நஷ்டம்

நஷ்டம்

போட்டிருந்த செட் அனைத்தும் மழையில் நனைந்து, நாசமாகி அதற்கு ரிப்பேர் செய்ய ஏற்பட்ட செலவு மட்டுமே 10 லட்சம் ஆனது. அதற்கான ஆதாரங்களையும் நாங்கள் சமர்பிக்க தயார். மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி அவர் ஏற்படுத்திய பொருட்செலவினால் எங்களால் சொன்ன தேதியை தாண்டியே ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை நடத்த முடிந்தது. இறுதியாக நாங்கள் வாங்கிய கடன், அதற்கான வட்டி என மொத்தமாக ரூ. 1.50 கோடி அதிகமாகவே இவரால் செலவானது. அதனால் தெலுங்கிலும் எங்களால் சொன்ன தேதியில் படத்தை வெளியிட முடியவில்லை. தெலுங்கு வினியோகஸ்தர்களிடம் நான் நஷ்டஈடு தரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

ஆதாரம்

ஆதாரம்

எனக்கு ஏற்பட்ட அனைத்து நஷ்டமும் நடிகர் ஜெய் அவர்களாலேயே ஏற்பட்டது. படத்தின் பட்ஜெட்டை இழுத்துவிட்டு எங்களை அவதிக்குள்ளாக்கியதும் அவர் தான். அதற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. எங்களுடன் பணிபுரிந்த சக நடிகர்கள் மற்றும் கேமராமேன், இயக்குனர் உள்பட அனைத்து பணியாளர்களுக்கும் இது தெரியும் என்று தயாரிப்பாளர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X