Balti Twitter Review: பல்டி டிவிட்டர் விமர்சனம்.. 10 கில்லியை ஒன்னா பாத்தது மாதிரி இருக்காமே..

சென்னை: பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகாம் மற்றும் நடிகர் சாந்தனு பாக்யராஜ் இணைந்து நடித்துள்ள படம் பல்டி. நேரடி மலையாளப் படம் என்றாலும் படம் தமிழிலும் வெளியாகியுள்ளது. இப்படம் ஷேன் நிகாமின் 25வது படம். மேலும் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார் சாய் அபயங்கர். படம் இன்று அதாவது செப்டம்பர் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து எக்ஸ் பக்கத்தில் தங்களது விமர்சனங்களை பகிர்ந்துள்ளார்கள். படத்தின் டிரைலரைப் பார்க்கும்போது படம் கபடி விளையாடும் இளைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது என்பதையும், படம் ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த வகையில் இணையவாசிகள் படம் குறித்து என்ன சொல்லி உள்ளார்கள் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

இணையவாசி ஒருவர், " படத்தில் கமெர்ஷியல் எலமெண்டுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. கபடி மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளை தத்ரூபமாக படக்குழு படமாக்கி உள்ளது. சாய் அபயங்கரின் பின்னணி இசையும் பாடலும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஷேன் நிகாம் மற்றும் சாந்தனுவின் கதாபாத்திரங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், சாந்தனுவின் கதாபாத்திரம் இருவரில் பெட்டராக உருவாக்கப்பட்டுள்ளது. அவரும் அதை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு இணையவாசி கூறும்போது, " படம் டெக்னிக்கலாக சிறப்பாக உள்ளது. சாய் அபயங்கரின் இசை தெறிக்கிறது. நட்பு, கேங் வார், காதல், ரொமான்ஸ் என படம் முழுக்க செம எண்டர்டைமெண்ட்கள் உள்ளது. கபடி காட்சிகளும் அதற்கு சாய் அபயங்கரின் பின்னணி இசையும் சேர்த்து பார்க்கும்போது சீட்டில் அமர முடியவில்லை. இயக்குநர் சொன்ன வார்த்தையை காப்பாற்றிவிட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

Balti Twitter Review Fans Appreciates Shane Nigam and Shanthanu Acting Sai Abayankar Music

பக்காவான படம்: அதேபோல் மற்றொரு இணையவாசி, " அட்டகாசமான ஆக்‌ஷன் காட்சிகளால் படம் ஜம்முனு இருக்கிறது. சாய் அபயங்கரின் இசை படத்தை மேலும் ரியாலிட்டிக்காக காட்டுகிறது. மொத்த படமாக நன்றாக இருந்தாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆவதைப் போன்ற உணர்வைத் தருகிறது. திரையரங்கில் பார்க்க பக்காவான படம் இது" என்று பதிவிட்டுள்ளார்.

திரைக்கதை: "படத்தின் முதல் காட்சியே ஒரு கொலையில் தான் தொடங்குகிறது. இந்த கொலை ஏன்? எதற்கு என்ற கேள்விகளுக்கு திரைக்கதை பதில் அளிக்கிறது. ஷேன் நிகாம் நடிப்பில் மிரட்டி விட்டிருக்காரு. ஹோட்டல் சண்டைக் காட்சி, சோடா கம்பெனி சண்டைக் காட்சி தரமாக உள்ளது. சாய் அபயங்கரின் இசை பட்டாசாக உள்ளது. கபடிப்போட்டி காட்சிகள் வரும்போது, கபடியை நேரில் பார்ப்பது போல உள்ளது" என ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

கிளைமாக்ஸ்: மற்றொரு ரசிகர், " படத்தின் இயக்குநர் உன்னி சிவலிங்கம் ஒரு அட்டகாசமான படத்தின் மூலம் இயக்குநராக கால் பதித்துள்ளார். மொத்தம் நான்கு நண்பர்களைப் பற்றிய கதை. கடைசி 30 நிமிடங்கள் படத்தின் மொத்த பரபரப்பையும் கொண்டு வந்து நிறுத்தி உள்ளார். ஷேன் நிகாம் அட்டகாசமாக நடித்துள்ளார். சாந்தனு மிகவும் கனமான கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். இவர்கள் இருவரும் தான் கதையின் மையம். செல்வராகவன் வில்லனாக மிரட்டி உள்ளார். மொத்தத்தில் படம் தரமான சம்பவம்" என்று பதிவிட்டுள்ளார். படத்திற்கு தொடர்ந்து பாசிடிவான விமரசனங்கள் கிடைத்து வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X