அவருக்கு மகளாக இருந்தேன்.. இந்த வயசுல பொண்ணு தேவையானு அவரை பேசுனாங்க.. பாலுமகேந்திரா மகள் ஓபன் டாக்
சென்னை: கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாலுமகேந்திரா. அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் இயக்குநராகவும் ஜொலித்தார். அவர் இயக்கிய அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, தலைமுறைகள் உள்ளிட்ட படங்கள் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக திகழ்ந்துகொண்டிருக்கின்றன. சினிமாவில் எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் அடைந்திருந்தாரோ அதேபோல் அவரை சுற்றி ஏராளமான சர்ச்சைகளும் இருந்தன. தற்போது அவரது வளர்ப்பு மகள் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
தமிழ் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பாலு மகேந்திரா. சில காரணங்களால் இந்தியாவுக்கு வந்த அவர் ஒளிப்பதிவு படிப்பு படித்து தலை சிறந்த கேமரா மேனாக திகழ்ந்துகொண்டிருந்தார். பிறகு இயக்குநராக அவதாரம் எடுத்த அவர் அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, மறுபடியும், சதிலீலாவதி, அது ஒரு கனாக்காலம், தலைமுறைகள் என அவர் இயக்கிய படங்கள் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதேபோல் கேமராவிலும் ஜாலம் காட்டியவர் அவர்.

செந்தாழம் பூவில்: உதாரணமாக முள்ளும் மலரும் திரைப்படத்தில் வரும் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாடலில் பாலுமகேந்திராவின் கேமரா அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். அதேபோல் பல படங்களில் பாலுமகேந்திராவின் கேமரா அந்தப் படங்களை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கின்றன. அவரது கேமரா கண்கள் மட்டும்தான் சாதாரண அழகியையும் பேரழகியாக காட்டும் என்று ரசிகர்களும், திரைத்துறையினரும் சொல்வதுண்டு.
சர்ச்சைகள்: பாலுமகேந்திரா சினிமாவில் எவ்வளவுக்கு எவ்வளவு புகழின் உச்சத்தில் இருந்தாரோ அதே அளவுக்கு சர்ச்சைகளின் உச்சத்திலும் இருந்தவர். முதலில் அகிலா என்பவரை திருமணம் செய்துகொண்ட அவர்; பிறகு நடிகை ஷோபாவை திருமணம் செய்துகொண்டார். அதனையடுத்து நடிகை மௌனிகாவுடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர்களில் அகிலாவுக்கும் - பாலுமகேந்திராவுக்கும் ஷங்கி என்ற மகன் இருக்கிறார்.
வீரியமான வித்துக்கள்: பாலுமகேந்திராவின் உதவி இயக்குநர்கள்தான் இன்று இந்தியாவின் முக்கியமான இயக்குநர்கள் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். பாலா, ராம், வெற்றிமாறன், சீனு ராமசாமி, விக்ரம் சுகுமாறன் என அந்த லிஸ்ட் செல்லும். அதேபோல் பாடலாசிரியர் நா. முத்துக்குமாரும் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ப்பு மகள்: இதற்கிடையே பாலுமகேந்திரா சக்தி என்ற பெண்ணை வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தார். இந்நிலையில் சக்தி சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "சினிமாவில் எனக்கு ஆர்வம் இருந்தது. பாலுமகேந்திராவிடம் எனது உறவினர் ஒருவர்தான் அறிமுகம் செய்துவைத்தார். அதற்கு முன்பு அவரை எனக்கு தெரியாது. அவரை பார்க்க சென்றபோது மகளே உள்ளே வா என்றுதான் கூப்பிட்டார். நானும் அம்மாவும் போயிருந்தோம். நடிப்பில் இருக்கும் எனது ஆர்வத்தை தெரிந்துகொண்டு என்னை ஃபோட்டோ எடுத்தார். அதற்கு அடுத்த வாரம் அழைத்தார்கள்.
மகளாக வளர்க்கட்டுமா: ஒரு சனிக்கிழமையில் நாங்கள் சென்றோம். அப்போது எனது அம்மாவிடம் எனக்கு பெண் குழந்தை கிடையாது. பெண் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று ஆசை எனக்கு உண்டு. இவங்கள நான் எனது மகளாக பார்த்துக்கொள்ளட்டுமா என்று கேட்டார். 2010ஆம் இறுதி முதல் அவர் இறக்கும்வரை அவருடனேயே இருந்தேன். அப்போது எனக்கு 11 வயதுதான் இருக்கும். எனது அப்பாவும் இறந்து சில மாதங்களில் பாலுமகேந்திரா என் மீது பாசமாக இருந்தது எமோஷனலாக இருந்தது.
தப்பாதான் பேசுனாங்க: அவர் என்னை மகளாகத்தான் பார்த்துக்கொண்டார். ஆனால் இந்த வயசுல ஒரு பொண்ணு கேட்குதானு எல்லோரும் அவரை தப்பாதான் பேசினாங்க. எனக்கும் அது தெரியும். அவருக்கும் தெரியும். எங்களது ரிலேஷன்ஷிப்பை யாருக்கும் புரிய வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் எனக்கு இல்லை” என்றார்.


Click it and Unblock the Notifications











