twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் படத்தில் பாலு மகேந்திரா கேமராவா... என்ன படம் ? இது எப்போ நடந்தது ?

    |

    சென்னை: ராஜபார்வை, அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற காலத்தால் அழியாத படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ். அவர் இயக்கிய தமிழ் படங்களில் பெரும்பாலும் கமல்ஹாசனே கதாநாயகனாக நடித்து இருப்பார்.

    சிங்கீதம் சீனிவாசராவ் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் பல சிறந்த படங்களை இயக்கி தெலுங்கு திரை உலகில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர்.

    சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய ஆரம்ப கால படங்களில் பாலுமகேந்திரா சில படங்களுக்கு கேமராமேனாக பணியாற்றினார் என்பது சமீப காலதத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

    கேமராமேன் பாலுமகேந்திரா

    கேமராமேன் பாலுமகேந்திரா

    பாலுமகேந்திரா தமிழில் பல உன்னத படைப்புகளை இயக்கி இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர். இவர் இயக்குனர் ஆக மாறுவதற்கு முன்பு பல முன்னணி இயக்குனர்களுடன் கேமராமேனாக பணியாற்றி உள்ளார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழி படங்களில் அவர் கேமராமேனாக பணியாற்றியுள்ளார். மணிரத்தினம் இயக்கிய முதல் படமான பல்லவி அனுபல்லவி படத்திற்கு கேமராமேனாக பணியாற்றியவர் பாலுமகேந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.

    நடிகை சோபாவின் அறிமுகம்

    நடிகை சோபாவின் அறிமுகம்

    சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய தெலுங்கு படமான தரம் மாரிந்தி ல் கதாநாயகியாக நடித்தார் நடிகை ஷோபா. அதே படத்தில் கேமராமேனாக பணியாற்றியவர் பாலுமகேந்திரா. பிற்காலத்தில் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறி பின் திருமணம் செய்து கொள்வதற்கு காரணமாக அமைந்தது.ஷோபா பாலுமகேந்திரா காதல் பற்றி ஊடங்கங்கள் பேசாத நாள் இல்லை அன்றைய தினங்களில் .

    முதல் டைம் டிராவல் படம்

    முதல் டைம் டிராவல் படம்

    தற்போது இந்திய சினிமாவில் பல பரீட்சார்த்தமான முயற்சிகள் செய்யப்படுகிறது. இதற்கெல்லாம் முன்னோடியாக சிங்கீதம் சீனிவாசராவ் இருக்கிறார். ஒரே பாணியில் படங்களை இயக்காமல் பல வித்தியாசமான முயற்சிகளை அவர் செய்திருப்பார். தெலுங்கில் அவர் இயக்கிய ஆதித்யா 369 இந்தியாவின் முதல் டைம் ட்ராவல் திரைப்படம். பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருப்பார். இப்படி பல புதிய விஷயங்களை இயற்றியவர் சிங்கீதம் சீனிவாச ராவ். லிட்டில் ஜான் போன்ற பல ஃபேண்டசி படங்களையும் அவர் இயக்கியுள்ளார்.

    கேமரா மேனாக 4 படங்கள்

    கேமரா மேனாக 4 படங்கள்

    சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் பாலுமகேந்திரா 4 தெலுங்கு படங்களில் கேமராமேனாக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும்போது அந்த நான்கு படங்களில் பெயர்களையும் குறிப்பிட்டு உள்ளார். தரம் மாரிந்தி, அமெரிக்கா அம்மாயி, சொம்மு ஒகடிதி சோகு ஒகடிதி, பந்துலம்மா என்ற படங்களை ஆகும் . சிங்கீதம் சீனிவாசராவ் படங்களில் பாலுமகேந்திரா கேமராமேனாக பணியாற்றியவர் என்பது தமிழ் ரசிகர்களுக்கு புது செய்தியாக தெரியவந்துள்ளது. இரண்டு மாபெரும் திறமைசாலிகள் ஒன்றாக சாதனைகள் செய்த தருணம் என்றும் சினிமா ரசிகர்களுக்கு பொக்கிஷமான ஒன்று தான் .

    English summary
    Balu Mahendra Camera in Singitam Srinivasa Rao movie What movie? When did this happen?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X