பாலுமகேந்திராவின் மகளா இவங்க?.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்.. ஹீரோயின் ஆகிடுவாங்களோ

சென்னை: கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாலுமகேந்திரா. அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் இயக்குநராகவும் ஜொலித்தார். அவர் இயக்கிய அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, தலைமுறைகள் உள்ளிட்ட படங்கள் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக திகழ்ந்துகொண்டிருக்கின்றன. சினிமாவில் எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் அடைந்திருந்தாரோ அதேபோல் அவரை சுற்றி ஏராளமான சர்ச்சைகளும் இருந்தன. தற்போது அவரது வளர்ப்பு மகள் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.

தமிழ் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பாலு மகேந்திரா. சில காரணங்களால் இந்தியாவுக்கு வந்த அவர் ஒளிப்பதிவு படிப்பு படித்து தலை சிறந்த கேமரா மேனாக திகழ்ந்துகொண்டிருந்தார். பிறகு இயக்குநராக அவதாரம் எடுத்த அவர் அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, மறுபடியும், சதிலீலாவதி, அது ஒரு கனாக்காலம், தலைமுறைகள் என அவர் இயக்கிய படங்கள் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதேபோல் கேமராவிலும் ஜாலம் காட்டியவர் அவர்.

Balu Mahendra Sakthi


செந்தாழம் பூவில்: உதாரணமாக முள்ளும் மலரும் திரைப்படத்தில் வரும் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாடலில் பாலுமகேந்திராவின் கேமரா அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். அதேபோல் பல படங்களில் பாலுமகேந்திராவின் கேமரா அந்தப் படங்களை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கின்றன. அவரது கேமரா கண்கள் மட்டும்தான் சாதாரண அழகியையும் பேரழகியாக காட்டும் என்று ரசிகர்களும், திரைத்துறையினரும் சொல்வதுண்டு.

சர்ச்சைகள்: பாலுமகேந்திரா சினிமாவில் எவ்வளவுக்கு எவ்வளவு புகழின் உச்சத்தில் இருந்தாரோ அதே அளவுக்கு சர்ச்சைகளின் உச்சத்திலும் இருந்தவர். முதலில் அகிலா என்பவரை திருமணம் செய்துகொண்ட அவர்; பிறகு நடிகை ஷோபாவை திருமணம் செய்துகொண்டார். அதனையடுத்து நடிகை மௌனிகாவுடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர்களில் அகிலா - பாலுமகேந்திராவுக்கு ஷங்கி என்ற மகன் இருக்கிறார்.

வீரியமான வித்துக்கள்: பாலுமகேந்திராவின் உதவி இயக்குநர்கள்தான் இன்று இந்தியாவின் முக்கியமான இயக்குநர்கள் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். பாலா, ராம், வெற்றிமாறன், சீனு ராமசாமி, விக்ரம் சுகுமாறன் என அந்த லிஸ்ட் செல்லும். அதேபோல் பாடலாசிரியர் நா. முத்துக்குமாரும் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ப்பு மகள்: இதற்கிடையே பாலுமகேந்திரா சக்தி என்ற பெண்ணை வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தார். அதனையும் பலர் தவறாக பேசினார்கள் என்று பாலுமகேந்திராவின் ரசிகர்கள் கூறுவார்கள். மேலும் அதனை சக்தியே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சக்தியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன. அதில் அவர் கொஞ்சம் தூக்கலான கிளாமரோடும் இருக்கிறார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அட அடுத்த ஹீரோயின் ஆகிடுவாங்களோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X