ஆவணப்படம் எடுக்கும் ஆசையிருக்கா? பாலு மகேந்திரா நூலகம் வழங்கும் பயிற்சிப் பட்டறை!

By

சென்னை: இயக்குனர் பாலு மகேந்திராவின் 7வது நினைவு நாளை முன்னிட்டு பாலுமகேந்திரா நூலகம் ஆவணப்பட பயிற்சிப்பட்டறையை நடத்துகிறது.

இந்தப் பயிற்சிப் பட்டறை வரும் 13,14 மற்றும் 15 ஆம் தேதிகளில் சென்னை, ஆழ்வார் திருநகரில் உள்ள பாலுமகேந்திரா நூலகத்தில் நடக்கிறது.

இதை, இயக்குனர், படத்தொகுப்பாளர் லெனின் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார்.

அம்ஷன் குமார்

அம்ஷன் குமார்

தொடர்ந்த மூன்று நாட்களும் தமிழகத்தின் முன்னணி ஆவணப்பட இயக்குனர்கள் அம்ஷன் குமார், சிவக்குமார், காஞ்சனை சீனிவாசன், அமுதன் ஆர்.பி. கோம்பை அன்வர், சோமிதரன் ஆகியோர் பங்கேற்கின்றனர். ஆவணப்படங்களுக்கான முன் தயாரிப்பு, கள ஆய்வு, முன்களப்பணி, திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு, குரல் பதிவு போன்ற துறைகளில் திரையிடலுடன் வகுப்புகள் எடுக்க உள்ளனர்.

சான்றிதழ்

சான்றிதழ்

மதிய உணவுடன் கட்டணம் ரூ.2000 செலுத்த வேண்டும். நூலக உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டணம் 1500 ரூபாய். இறுதிநாள் நிகழ்வில் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு செய்ய 9884060274 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

அஜயன் பாலா

அஜயன் பாலா

இதுபற்றி இயக்குனர் அஜயன் பாலா கூறும்போது, 'ஓடிடி வருகைக்குப் பின் திரைப்படம் பல்வேறு பரிணாமங்களை விரித்துக் கொண்டு வளர்ந்து வருகிறது. வெப் சீரீஸ் வருகைக்குப் பின் கதைப்படங்களைத் தாண்டி வாழ்க்கை வரலாறு, ஆவணப்படம் ஆகியவற்றின் ரசிகர்களும் அதிகரிக்கத் துவங்கியிருக்கின்றனர்.

பயிற்சிப்பட்டறை

பயிற்சிப்பட்டறை

இந்த மாற்றங்களின் எதிரொலியாக, தமிழகத்திலும் பலரும் ஆவணப்படங்களை கற்கவும் எடுக்கவும் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இச்சூழலில் தான் ஆவணப்படங்களை எடுக்கும் முறை குறித்து பயிற்சிப் பட்டறை ஒன்றை ஒருங்கிணைத்துள்ளோம். இது ஆர்வமுள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X