பாலு மகேந்திரா உடல் அடக்கம் செய்யப்பட்டது!

By Shankar

சென்னை: நேற்று மரணமடைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடந்தன.

சென்னை போரூர் உள்ள மயானத்தில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மகன் ஷங்கி மகேந்திரா இறுதிச் சடங்குகளைச் செய்தார்.

முன்னதாக பாலு மகேந்திராவின் உடல் பொதுமக்கள் மற்றும் திரைத் துறையினர் அஞ்சலிக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா சினிமா பட்டறை வளாகத்தில் வைக்கப்பட்டது.

balu mahendra

திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பாலுமகேந்திராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பிற்பகல் 12.30க்குப் பிறகு அவரது உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது. பறை, தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலம் நடந்தது. ஏராளமான சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் இதில் கலந்து கொண்டனர்.

பிற்பகல் 1 மணிக்குப் பிறகு அவரது உடல் போரூர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சினிமாவின் ஒரு பெரும் சகாப்தத்தின் இயக்கம் முற்றுப் பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X