twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலு மகேந்திரா திரையில் காட்டிய காட்சி நிஜமான அதிசயம்!

    By Shankar
    |

    பாலு மகேந்திரா தனது தலைமுறைகள் படத்துக்காக எழுதிய திரைக்கதை, நிஜத்திலும் நடந்தே விட்டது.

    'தலைமுறைகள்' திரைப்படம் சிறந்த சமூக ஒருமைப்பாட்டுக்கான தேசிய விருதைப் பெற்றது.

    Balu Mahendra's story comes true in real

    இதற்காக அந்தப் படக் குழுவினர் சென்னை பிரசாத் லேப்பில் பத்திரிகையாளர்களை சமீபத்தில் சந்தித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பாலு மகேந்திராவின் பிரமாண்ட படம் வைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பு தயாரிப்பாளரான சசிகுமாரும், படத்தில் நடித்தவர்களும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பத்திரிகையாளர்களும் அவ்வாறே தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர்.

    பின்னர் சசிகுமார் பேசினார். அவர் கூறுகையில், "இந்தப் படத்தை நான் தயாரித்ததிற்காக மிகவும் பெருமைப்படுறேன். இந்தப் படத்துக்கு நிச்சயமாக விருது கிடைக்கும் என்று பாலுமகேந்திரா சார் சொன்னார். அவர் வாக்கு பலித்துவிட்டது.

    ஆனால் அவர்தான் இல்லை. மேலும் படத்தில் அவர் வைத்த ஒரு காட்சி நிஜத்திலும் அப்படியே நடந்துவிட்டது. படத்தின் இறுதியில் பேரன் என்ற முறையில் அவரால் வளர்க்கப்பட்ட நான் விருது வாங்குவேன். அந்தக் காட்சியில் நான்தான் நடித்திருந்தேன்.

    இப்போது நிஜமாகவே இத் திரைப்படத்திற்கான தேசிய விருதினை பாலு மகேந்திராவின் நிஜ பேரன் ஷ்ரேயான்தான் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றான். இது அவரே எதிர்பார்க்காத ஒரு பொருத்தமான நிகழ்வு. என்றென்றும் இத்திரைப்படத்தின் தயாரிப்பு பற்றிய செய்திகளும், விஷயங்களும் என் நினைவில் இருக்கும்," என்றார்.

    English summary
    Director Sasikumar remembered the co incidence of Balu Mahendra's Thalaimuraigal story and President's award for the film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X