ராஜ இசை... இளையராஜாவை நேரில் சந்தித்து நன்றி சொன்ன பாலு மகேந்திரா, சசிக்குமார்
சென்னை: தலைமுறைகள் படத்திற்காக அருமையான முறையில் பின்னணி இசை அமைத்திருப்பதற்காக இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்துப் பாராட்டினர் படத்தின் இயக்குநர் பாலு மகேந்திராவும், நாயகன் சசிக்குமாரும்.
பாலு மகேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சசிக்குமார் நாயகனாக நடித்துள்ளார்.
வழக்கம் போல பாலு மகேந்திராவின் இந்தப் படத்திற்கும் இளையராஜாவே இசையமைத்துள்ளார்.

யு சான்றிதழ்
இப்படத்திற்கு யு சான்றிதழ் ஏற்கனவே கிடைத்து விட்டது. இப்படத்தின் இயக்கம் தவிர கேமரா மற்றும் எடிட்டிங்கையும் பாலு மகேந்திராவே கவனிக்கிறார்.

நடித்தும் இருக்கிறார்
மேலும் இப்படத்தில் நடித்தும் இருக்கிறார் பாலு மகேந்திரா என்பது சுவாரஸ்யமானது.

2005க்குப் பிறகு
கடைசியாக பாலு மகேந்திரா இயக்கிய படம் அது ஒரு கனாக்காலம். 2005ல் வெளியான இதில் தனுஷ், பிரியாமணி நடித்திருந்தனர்.

சசிக்குமார் நடித்து தயாரிப்பு
இந்தப் படத்தை இயக்குநர் சசிக்குமார் ஹீரோவாக நடித்து, தயாரித்தும் இருக்கிறார்.

இளையராஜா இசை
படத்தின் இசைப் பங்களிப்பு, இளையராஜா. ராஜாவின் இசையில் சசிக்குமார் நடித்திருப்பது இதுவே முதல் முறை...

ஆனால் ராஜாவை வைத்துத்தான்...
இருப்பினும் இதற்கு முந்தைய சசிக்குமார் படங்களில் இளையராஜாவின் பாடல்களை படு தாராளமாக எடுத்துக் கையாண்டிருப்பார்கள். குறிப்பாக சுப்பிரமணியபுரத்தில்....

நேரில் பார்த்து பாராட்டு
தலைமுறைகள் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பை முடித்து விட்டார் ராஜா. அதைப் பார்த்து பிரமித்துப் போன பாலு மகேந்திராவும், சசிக்குமாரும் இன்று ராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











