ஜில்லா ரிலீஸ் அன்று ரசிகர்கள் பேனர், கட் அவுட் வைக்க தடை
சென்னை: ஜில்லா பட ரிலீஸ் அன்று ரசிகர்கள் பேனர், கட் அவுட்டுகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாம். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தலைவா பட பிரச்சனைக்கு பிறகு ஜில்லா படத்தை எந்த வித சிக்கலும் இன்றி ரிலீஸ் செய்ய விஜய் விரும்புகிறார். இதனால் படத்தில் பஞ்ச் வசனங்களே வேண்டாம் என்று கூறிவிட்டார் விஜய். படமும் பொங்கலுக்கு ரிலீஸாக தயாராகிவிட்டது. இந்நிலையில் ரிலீஸ் தேதி அன்று அவரது ரசிகர்கள் படத்தின் பேனர், கட் அவுட்டுகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.

இதனால் விஜய் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க, நெருங்க தயாரிப்பாளருக்கு தான் கலக்கமாக உள்ளதாம். ஜில்லா படம் தமிழகம் தவிர கேரளாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments


Click it and Unblock the Notifications