twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியை பேசும் 'மெரினா புரட்சி' படத்திற்கு தடை!

    மெரினா புரட்சி படத்திற்கு சென்சார் போர்டு தடைவிதித்துள்ளது.

    |

    சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியை பற்றி பேசும் மெரினா புரட்சி படத்திற்கு சென்சார் போர்டு .... தடைவிதித்துள்ளது.

    நாட்சியாள் பிலிம்ஸ் சார்பில் எம்.எஸ்.ராஜ், தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் மெரினா புரட்சி. பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி கடந்த ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியை பேசும் வகையில் புலனாய்வு பார்வையில் இப்படம் உருவாகியிருக்கிறுது.

    Ban for Marina puratchi

    இப்படம் வெளியானதும், ஜல்லிக்கட்டுக்கு தடைக்கு காரணமாக இருந்த சில தமிழர்களின் முகமூடி கிழியும் என இயக்கும் எம். எஸ்.ராஜ் தெரிவித்திருந்தார். இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

    [தனுஷின் ஏக்கத்தை தீர்த்து வைப்பாரா ரஜினி?]

    இந்நிலையில் இப்படத்திற்கு சான்றிதழ் தர மத்திய தணிக்கை வாரியம் மறுத்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறுது. மெரினா புரட்சி படத்திற்கு தடைவிதித்துள்ள தணிக்கை வாரியம், மும்பையில் உள்ள மறு சீராய்வு கமிட்டிக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

    மறு சீராய்வு குழுவில் மெரினா புரட்சி திரைப்படத்திற்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    English summary
    The CBFC have banned Marina Puratchi movie, which is speaking the truth behind Jallikattu protest.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X