தயாரிப்பாளர்களுக்குள் மோதல்: சூர்யாவை வைத்து கவுதம் மேனன் இயக்கவிருந்த படத்துக்குத் தடை!

By Shankar

Goutham Menon and Surya
தயாரிப்பாளர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக சூர்யாவை வைத்து கவுதம் மேனன் இயக்கவிருந்த படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை 8-வது சிட்டி சிவில் கோர்ட்டில் ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.ஜெயராமன் தாக்கல் செய்துள்ள மனுவில், "போட்டோன் பேக்டரி என்ற நிறுவனத்தின் பங்குதாரர்களாக கவுதம் வாசுதேவ மேனன், பி.மதன் ஆகியோர் உள்ளனர்.

இவர்களது நிறுவனத்துடன் 27.11.2008 அன்று ஒரு ஒப்பந்தம் செய்தேன். அந்த ஒப்பந்தத்தின்படி, ஏ.ஆர். ரஹ்மான் இசையில், நடிகர் சிம்பு கதாநாயகனான நடிக்கும் படத்தை இயக்கி தயாரித்து தருவதாக கூறி ரூ.4.25 கோடியை முன்தொகையாக என்னிடம் வாங்கினார்கள். ஆனால் இதுவரை எனக்கு படம் எடுத்து தரவில்லை.

இதற்கிடையில் பி.மதன் தனியாக எஸ்கேப் ஆர்டிஸ்ட் என்ற கம்பெனி தொடங்கி, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற படத்தை தயாரித்து வருகிறார். அதேபோல, கவுதம் வாசுதேவ மேனன், நடிகர் சூர்யாவை வைத்து 'துப்பறியும் ஆனந்தன்' என்ற படத்தை இயக்கப்போவதாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இவர்கள் 2 பேரும் தனித்தனியாக கம்பெனி தொடங்கி பிரிந்து சென்று விட்டால், இவர்களிடம் இருந்து என்னுடைய பணத்தை திரும்பி வாங்க முடியாமல் போய்விடும். இதனால் எனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே என்னுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி எனக்கு படம் தயாரித்து தராமல் வேறு நபர்களுக்கு படங்கள் இயக்கவோ, தயாரிக்கவோ கூடாது என்று கவுதம் வாசுதேவ மேனன், பி.மதன் ஆகியோருக்கு தடை விதிக்கவேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, "கவுதம் வாசுதேவ மேனன், மதன் ஆகியோர் வேறு நபர்களுக்கு படம் எடுக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது," என்று உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X