twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரவிந்த சாமியின் படத்தை ஓடிடியில் வெளியிட தடை..உயர் நீதிமன்றம் உத்தரவு

    |

    நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான ரெண்டகம் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    கதையை கேட்டுவிட்டு தன்னை விட்டு வேறு ஒருவரை வைத்து படம் எடுத்ததாக கதாசிரியர் ஒருவர் புகார் அளித்ததன் பேரில் தடை வழங்கப்பட்டுள்ளது.

    படம் சம்பந்தப்பட்ட 5 பேர் தலா பத்து லட்ச ரூபாய் டெபாசிட் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    தனுஷின் வாத்தி ஓடிடி உரிமைக்கு அடித்த ஜாக்பாட்… ரிலீஸுக்கு முன்பே செம்ம கெத்து தான் போங்க…தனுஷின் வாத்தி ஓடிடி உரிமைக்கு அடித்த ஜாக்பாட்… ரிலீஸுக்கு முன்பே செம்ம கெத்து தான் போங்க…

    மணி ரத்னத்தின் ஆஸ்தான நாயகன் அரவிந்தசாமி

    மணி ரத்னத்தின் ஆஸ்தான நாயகன் அரவிந்தசாமி

    நடிகர் அரவிந்த் சாமி 1992 ஆம் ஆண்டு ரோஜா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார். மணி ரத்னத்தின் ஆஸ்தான நடிகர் என்று சொல்லும் அளவுக்கு மணி ரத்னம் படங்களில் அதிக அளவு நடித்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி மீண்டும் மணிரத்னம் படத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் உள்ளிட்டோருடன் நடித்தார்.

     அரவிந்த சாமியின் ரெண்டகம் மீது கதை திருட்டு புகார்

    அரவிந்த சாமியின் ரெண்டகம் மீது கதை திருட்டு புகார்

    அரவிந்த் சாமி நடிப்பில் சமீபத்தில் ரெண்டகம் படம் வெளியானது. ஃபெலினி இயக்கத்தில் தமிழில் ரெண்டகம் என்ற பெயரிலும், மலையாளத்தில் ஒட்டு என்ற பெயரிலும் இயக்கக்கப்பட்ட திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்நிலையில் ரெண்டகம் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாக இருந்தது. ஆனால் இப்படத்திற்கு தடை கோரி சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த கிஷோர் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

     ஓடிடியில் படத்தை வெளியிட தடை

    ஓடிடியில் படத்தை வெளியிட தடை

    அவர் தாக்கல் செய்த மனுவில், "இந்த படத்தின் கதையை ஜாவா என்ற பெயரில் இயக்குவதற்காக நடிகர் அரவிந்த் சாமியிடம் கதை சொல்லியிருந்தேன். மேலும் இந்த கதையை பதிவு செய்து அதற்கான காப்புரிமை பெற்றிருக்கிறேன். இந்நிலையில் இதே கதை களத்துடன் தமிழில் ரெண்டகம் என்ற படம் வெளியாகியுள்ளது, இந்தப்படம் இன்று ஓடிடியில் வெளியாக உள்ளது, ஆகவே படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கேட்டிருந்தார்.

    படக்குழுவினர் தலா 10 லட்சம் டெபாசிட் செய்ய உத்தரவு

    படக்குழுவினர் தலா 10 லட்சம் டெபாசிட் செய்ய உத்தரவு

    இந்த வழக்கு உயர் நீதிமன்றம் நீதிபதி சரவணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், ரெண்டகம் படத்தை ஓடிடி தளத்தில் இந்தியாவில் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐந்து பேர் தலா பத்து லட்சம் ரூபாயை வரும் 10 ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அன்றைக்கு ஒத்திவைத்தார்.

    English summary
    The High Court has banned, the release of the film Rendagam, starring actor Aravindsamy, on the OTT platform. The ban has been given after a story writer complained that after listening to the story, the film was made with someone other than him. 5 people involved in the film have also been ordered to deposit ten lakh rupees each.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X