twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முன் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு... தஞ்சையில் உதயநிதியின் ‘நண்பேண்டா’ படப்பிடிப்பிற்கு தடை

    |

    தஞ்சை: தஞ்சை கூர்நோக்கு இல்லத்தில் முறையான அனுமதி பெறவில்லை எனக் காரணம் காட்டி, உதயநிதிஸ்டாலின் நடிக்கும் 'நண்பேண்டா' படத்தின் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

    உதயநிதி ஸ்டாலின் கதாநயாகனாக நடிக்கும் புதிய படம் நண்பேன்டா. இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் சந்தானம் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தஞ்சை மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

    150 ஆண்டு சிறை...

    150 ஆண்டு சிறை...

    தஞ்சை மணிமண்டபம் அருகே 150 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சிறைக்கூடம் உள்ளது. இங்கு தற்போது அரசு குழந்தைகள் இல்லம், அரசு கூர்நோக்கு இல்லம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

    மழையால் ரத்து...

    மழையால் ரத்து...

    இந்த கூர்நோக்கு இல்ல வளாகத்தில், உதயநிதி, சந்தானம் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க நண்பேன்டா படக்குழு திட்டமிட்டது. இதற்காக கூர்நோக்கு இல்லத்தில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டனர். ஆனால் சம்பவத்தன்று மாலையில் மழை பெய்ததால் படப்பிடிப்பு ரத்தானது.

    ஆயத்த வேலைகள்...

    ஆயத்த வேலைகள்...

    அதனைத் தொடர்ந்து மறுநாள் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவு செய்தது. உதயநிதி ஸ்டாலின், சந்தானம் ஆகியோர் வேனில் காத்திருக்க படக்குழுவினர் படப்பிடிப்பிற்கான ஆயத்த வேலைகளில் இறங்கினர்.

    ரத்து...

    ரத்து...

    அப்போது கூர்நோக்கு இல்ல அதிகாரிகளுக்கு படக்குழுவினர், அங்கு படப்பிடிப்பு நடத்த முறையான அனுமதி பெறவில்லை எனத் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடத்தக் கூடாது என அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். படப்பிடிப்பு குழுவினரும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு திருச்சி புறப்பட்டு சென்றனர்.

    அனுமதி கடிதம்...

    அனுமதி கடிதம்...

    கூர்நோக்கு இல்லத்தில் படப்பிடிபு நடத்த சென்னையில் உள்ள சமூக பாதுகாப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த கடிதம் அனுப்பியதற்கான நகலை மட்டுமே காட்டி நண்பேண்டா படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது

    English summary
    The Tanjore district administration has banned the shooting of Udhayanidhi Stalin's new film Nanbeandaa.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X