»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜோதிகா நடித்த சிநேகிதியே படத்தை நான்கு வாரத்திற்கு வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஜோதிகா கதாநாயகியாக நடித்து சிநேகிதியே என்ற படம் 10-ம் தேதி வெளியாவதாக இருந்தது. இதே படம் ராக்கிலிபட்டு என்ற பெயரில்மலையாளத்திலும் எடுக்கப்பட்டது. அதிலும் ஜோதிகாதான் கதாநாயகி. இதுவும் 10-ம் தேதி வெளிவருவதாக இருந்தது.

இரு படங்களையும் தயாரித்தவர் முகேஷ் மேத்தா என்பவர். படங்கள் திரைக்கு வரும் நேரத்தில் குருபரன் விஷன்ஸ் பட நிறுவனர் ஜீவானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தனது மனுவில் முகேஷ் மேத்தா என்னிடம் 55 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார் இன்றுவரை கடனை திருப்பித் தரவில்லை. எனவே இந்த இருபடங்களையும் திரையிடுவதை தடை செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி இந்த இரு படங்களையும் வெளியிட நான்கு வாரங்கள் தடை விதித்து தீர்ப்பளித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil