கவுண்டமணி படத்தில் மீண்டும் ’வாழைப்பழ காமெடி’.. ஆனால், இந்த முறை விஷயமே வேற.. என்ன தெரியுமா?

சென்னை: கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் இணைந்து செய்த வாழைப்பழ காமெடியை அந்த காலம் முதல் இப்போது வரை ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து பார்க்கின்றனர். இந்நிலையில், அந்த நாஸ்டாலஜிக் விஷயத்தை மீண்டும் கவுண்டமணி படத்தில் ரீக்ரியேட் செய்துள்ளார்களாம்.

இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் 83 வயதை கடந்த கவுண்டமணி ஹீரோவாக நடித்து வரும் ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் வாழை பழ காமெடி ஸ்டைலில் பாடல் ஒன்றை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Banana comedy style song ready for Goundamani and Yogi Babu movie

நாகேஷ் முதல் யோகி பாபு வரை: சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷின் கார் டிரைவராக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் கவுண்டமணி. செந்தில் மற்றும் கவுண்டமணி இணைந்து கிளப்பிய அலப்பறைகள் எல்லாம் ரசிகர்களை வேறலெவலில் சிரிக்க வைத்தன. கவுண்டமணியுடன் வடிவேலு முதல் பல பிரபல காமெடி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், இப்போது சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் யோகி பாபுவுடன் இணைந்து கவுண்டமணி ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் சூப்பரான அப்டேட் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

Banana comedy style song ready for Goundamani and Yogi Babu movie

ஒத்த ஓட்டு முத்தையா: காமெடி நடிகராக ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த கவுண்டமணி உடல் நலம் மற்றும் வயது மூப்பு காரணமாக பல ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால், தொடர்ந்து சினிமாவில் அவரை நடிக்க வைக்க பலரும் முயற்சித்து வந்த நிலையில், சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகி வரும் ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் நடித்து வருகிறார் கவுண்டமணி. ஏற்கனவே யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படத்தின் கதையும் இதே போலவே இருக்கே என டைட்டிலை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் அடித்தாலும் கவுண்டமணியின் கம்பேக்கிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Banana comedy style song ready for Goundamani and Yogi Babu movie

வாழைப்பழ காமெடி ஸ்டைலில் பாடல்: "ஒன்னு தான் இங்க இருக்கு.. இன்னொன்னு எங்க இருக்கு" என வாழைப்பழ காமெடி ஸ்டைலில் பாடல் ஒன்று உருவாகி உள்ளதாகவும் விரைவில் அந்த பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கவுண்டமணி மற்றும் யோகி பாபு காம்பினேஷன் கலக்கலாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X