சல்மான் கானின் 'தபாங் 2' வசூலை முறியடித்த ரித்திக்கின் 'பேங் பேங்'
மும்பை: ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான பேங் பேங் சல்மான் கானின் தபாங் 2 பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
பிற உட்களில் ரூ. 100 கோடி வசூலை பெற படாதபாடு பட வேண்டி உள்ளது. இந்நிலையில் அண்மை காலமாக பாலிவுட் படங்கள் சர்வ சாதாரணமாக ரூ. 100 கோடி, ரூ.200 கோடி, ரூ.300 கோடி வசூல் செய்து வருகின்றன.
இந்த சூழலில் கடந்த 2ம் தேதி ரிலீஸான படம் பேங் பேங்.

ரித்திக் ஷோ
ஹாலிவுட் படமான நைட் அன்ட் டேயின் ரீமேக் தான் ரித்திக் ரோஷன், கத்ரீனா கைஃப் நடித்த பேங் பேங்.

விமர்சனம்
பேங் பேங் ரித்திக் ரோஷன் வெறியர்களுக்கு தான் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். படத்திற்கு விமர்சகர்கள் பெரிதாக மதிப்பெண் தந்துவிடவில்லை.

ரசிகர்கள்
பாலிவுட் படங்களுக்கு ஒரு ராசி உள்ளது. அதாவது விமர்சகர்கள் துப்பினால் ரசிகர்கள் அதை கொண்டாடி சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிடுகிறார்கள். பேங் பேங் படமும் அப்படி தான்.

ரூ. 200 கோடி
ரித்திக் ரோஷன் பாடி ஷோ காட்டி, கத்ரீனா கைஃப் அவ்வப்போது குளித்து, ஈரம் காய்ந்தால் மறுபடியும் நனைந்து ஹீரோவை முத்தம் கொடுக்க அழைக்கும் பேங் பேங் ரிலீஸான 5 நாட்களில் ரூ. 200 கோடி வசூல் செய்தது.

தபாங் 2
தற்போது பேங் பேங் இந்தியாவில் மட்டும் ரூ.144.45 கோடி வசூல் செய்துள்ளது. உலக அளவில் ரூ.265.25 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் சல்மான் கானின் தபாங் 2 (ரூ.265 கோடி) பட வசூலை பேங் பேங் முறியடித்துள்ளது.

ரித்திக் படம்
ரித்திக் படங்கள் வந்தால் அவரது ரசிகைகளுக்கு கொண்டாட்டம் தான். மனிதர் கும்மென்ற ஜிம் பாடியை காட்டுவார், பாம்பு போன்று ஆடுவார், தனது அழகால் வசீகரிப்பார். இது போதாதா கதை எல்லாம் யாருக்கு பாஸ் வேண்டும் என்கிறது ரசிகைகள் கூட்டம். அப்படி என்றால் அவர் படங்கள் சக்கை போடுபோடுவதில் ஆச்சரியம் இல்லை.

க்ரிஷ் 3
ரித்திக் ரோஷன் நடித்த க்ரிஷ் 3 படத்தை பார்த்த ரித்திக் ரசிகர்களாலேயே ஜீரணிக்க முடியவில்லை. இருப்பினும் படம் கோடிகளில் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











