ஹிருத்திக் ரோஷனின் பாங் பாங்… 3 நாளில் 125 கோடி வசூல்!

By Mayura Akilan

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள பாங் பாங் திரைப்படம் 3 நாளில் 125 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது.

ஹிருத்திக் ரோஷன், கத்ரீனா கைஃப் ஜோடி சேர்ந்துள்ள ‘பாங் பாங்' திரைப்படம் உலகம் முழுவதும் 4500 திரைகளில் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய அளவில், மிக அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்ட பாலிவுட் திரைப்படம் படம் எனும் பெருமை இப்படத்திற்கு கிடைத்துள்ளது.

அதிரடியும், திகிலும் கலந்துள்ள இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார்.

அக்டோபர் 2ஆம் தேதி வெளியான முதல் நாள் தொடங்கி ஞாயிறு வரை மூன்று நாட்களில் மட்டும் இந்த திரைப்படம் ரூ.125 கோடியை வசூலித்துள்ளது.

5 நாள் விடுமுறையில்

5 நாள் விடுமுறையில்

ஆயுதபூஜை தொடங்கி பக்ரீத் வரை தொடர்ந்து வரும் 5 நாள் விடுமுறை காரணமாக படத்தின் வசூல் பல்வேறு திரைச் சாதனைகளை முறியடிக்கும் என பிவிஆர் சினிமாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கௌதம் தத்தா கூறியுள்ளார்.

50 வெளிநாடுகளில்

50 வெளிநாடுகளில்

‘பாங் பாங்' படம் மொத்தம் 50 நாடுகளில் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிக அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் ஹவுஸ்ஃபுல்

எல்லாம் ஹவுஸ்ஃபுல்

இப்படத்திற்கு செப்டம்பர் 28ம் தேதியே முன்பதிவு முடிந்து, இப்படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் போர்ட் போட வைத்துள்ளது.

சூப்பர் கெமிஸ்ட்ரி

சூப்பர் கெமிஸ்ட்ரி

ஹிருத்திக்-கத்ரீனாவின் இதுவரை பாலிவுட்டில் கண்டிறாத ஆக்ஷன், அவர்களின் கெமிஸ்ட்ரி, சூப்பர்ஹிட் இசை, ஹிருத்திக்கின் அசத்தல் நடனம், வித்தியாசமான கதை என பலவித சிறப்பம்சங்களால் இந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

வசூலில் சாதனை

வசூலில் சாதனை

மசாலா கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம், 2014ம் ஆண்டு அதிக வசூலை அள்ளிக் குவிக்கும் சூப்பர்ஹிட் படமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. ரூ.180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் முதல் 3 நாட்களிலேயே 75 சதவீதம் முதலீட்டு தொகையை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாங் பாங் வசூலில் டாப் 5

பாங் பாங் வசூலில் டாப் 5

பாங் பாங் படம் ரிலீசான முதல் நாளில் ரூ.27.54 வசூலை அள்ளி, பாலிவுட்டில் ரிலீசான அன்றே அதிக வசூலை அள்ளிய டாப் 5 படங்களின் பட்டியலில் இடம்பிடித்தது.

தூம் 3தான் இதுவரை டாப்

தூம் 3தான் இதுவரை டாப்

36.22 கோடிகளுடன் தூம் 3, 33.12 கோடிகளுடன் சென்னை எக்ஸ்பிரஸ், 32.93 கோடிகளுடன் ஏக் தா டைகர், 32.09 கோடிகளுடன் சிங்கம் ரிட்டர்ன்ஸ் ஆகியன பாங் பாங் படத்திற்கு முன் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X