5 நாட்களில் ரூ 200 கோடி குவித்த பேங் பேங்!
ஹ்ரித்திக் ரோஷனின் பேங் பேங் படம் ஐந்து நாட்களில் ரூ 200 கோடியைக் குவித்துள்ளது.
ஹ்ரித்திக் ரோஷன், கத்ரினா கைஃப் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள பேங் பேங் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது.

முதல் 5 நாட்களில் உள்நாட்டில் மட்டுமே ரூ 156 கோடியை ஈட்டி சாதனை படைத்துள்ளது இந்தப் படம்.
வெளிநாடுகளில் ரூ 45.01 கோடியை இந்தப் படம் குவித்துள்ளது. 5 நாட்களில் இவ்வளவு தொகை குவித்தது ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
சர்வதேச பாக்ஸ் ஆபீஸைப் பொருத்தவரை இந்தியப் படங்களின் அத்தனை சாதனைகளையும் முறியடித்துள்ளது இந்தப் படம். மத்திய கிழக்கு, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இப்படத்துக்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது.
க்ரிஷ் 3, அக்னீபத், ஜிந்தகி நா மிலேகி தோபரா போன்ற படங்களின் வசூல் சாதனைகளை பேங் பேங் எடுத்த எடுப்பிலேயே முறியடித்துள்ளது இந்தப் படம்.


Click it and Unblock the Notifications











