‘பெங்களூர் டேஸ்’ தமிழ் ரீமேக்.... ஆர்யா - பரத் - சமந்தா நடிக்கிறார்கள் ?
சென்னை: திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மலையாளப் படமான பெங்களூர் டேஸ், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப் பட உள்ளது.
துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின் பாலி, நஸ்ரியா நஸீம், பார்வதிமேனன் மற்றும் நித்யாமேனன் என நட்சத்திரக் கூட்டங்கள் நடித்து வெளிவந்திருக்கும் மலையாளப் படம் 'பெங்களூர் டேஸ்'. இப்படத்தை அஞ்சலி மேனன் என்ற இளவயது பெண் இயக்குனர் கதை எழுதி இயக்கியிருக்கிறார். அன்வர் ரஷீத் தயாரித்திருக்கிறார்.
இப்படம் கேரளாவைத் தவிர மற்ற இடங்களில் சப்டைட்டிலோடு ரிலீஸ் ஆகியிருப்பதால் இப்படத்திற்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

கதைக்களம்...
இன்றைய இளைய சமூகத்திற்கேற்றாற்போல், அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் நடக்கின்ற சம்பவங்களை திரையில் புதிய அனுபவத்தைக் கொடுப்பதாக அமைந்திருப்பது இப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

ரீமேக் உரிமை...
பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டானதால் இந்தப் படத்தை வாங்க பலர் போட்டி போட்டனர். இறுதியில் . தற்போது பி.வி.பி. சினிமா நிறுவனமும், பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தரான தில் ராஜுவும் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரிக்கவுள்ளார்கள்.

பாஸ்கரன் இயக்கத்தில்...
தமிழில் வெளிவந்த சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் தெலுங்கு பதிப்பை இயக்கிய பாஸ்கரன் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இயக்கவுள்ளார்.

ஆர்யா - பரத் - சமந்தா...
தற்போது இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேடும் படலம் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஆர்யா, பரத் மற்றும் சமந்தாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்ப்பு...
படத்தைப் பார்த்த பலர் பேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுதி படத்திற்கு ஐ.எஸ்.ஐ முத்திரை கொடுத்து வருவது பெங்களூர் டேஸ் மீதான எதிர்பார்ப்பை ஏகத்திற்கு எகிற வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











