விஜய் பத்தியெல்லாம் இங்க பேசாதீங்க.. இது பெங்களூரு.. ரஜினி மட்டும் தான் ஒரே சூப்பர்ஸ்டார்!
பெங்களூர்: கர்நாடகாவில் முதல் நாளிலேயே டபுள் டிஜிட் வசூல் செய்து மாஸ் காட்டி வருகிறது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம். இதுவரை இல்லாத அளவுக்கு வெறித்தனத்துடன் ரசிகர்கள் ஜெயிலர் படத்தை பார்த்து வருகின்றனர்.
கேரளாவில் எல்லாம் நள்ளிரவு 12 மணி மற்றும் அதிகாலை 3 மணிக்கு எல்லாம் சிறப்பு காட்சிகள் எல்லாம் ஓடிக் கொண்டு ஒவ்வொரு ஏரியாவிலும் அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.

பெங்களூருவில் ரசிகர்கள் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் அது ரஜினி மட்டும் தான் என்றும் விஜய், அஜித் பத்தியெல்லாம் இங்கே பேசாதீங்க என்றும் பப்ளிக் ரிவ்யூக்களில் பேசி வரும் வீடியோக்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றன.
இப்படியொரு மாஸ்: 72 வயதில் இப்படியொரு மாஸ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை தவிர இந்தியாவில் வேறு எந்தவொரு நடிகருக்குமே இருக்காது என்று ரஜினி ரசிகர்கள் கெத்துக் காட்டி வருகின்றனர். முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் மட்டும் 30 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுமா என்கிற எதிர்பார்ப்பும் எகிறியிருக்கிறது.

சிவராஜ்குமார் சீன் ஃபயரு: நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் கேமியோவாக வரும் சிவராஜ்குமாரின் ஆரம்ப சீனே அதிரடியாக இருப்பது கன்னட ரசிகர்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. சிவராஜ்குமாரையும் தாண்டி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பார்க்கவே ஏகப்பட்ட ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
விஜய் அஜித் எல்லாம் இல்லை: எப்போதுமே சூப்பர்ஸ்டார் என்றால் ரஜினி சார் மட்டும் தான். அவர் தான் எங்க தலைவரு, விஜய், அஜித்தை பற்றியெல்லாம் இங்க பேசாதீங்க இது பெங்களூரு என ஜெயிலர் முதல் நாள் ஷோவில் ரசிகர்கள் ஆரவாரம் செய்துள்ளனர். மேலும், இதே அளவுக்கு மாஸை விஜய் படமோ அல்லது அஜித் படமோ பெங்களூரில் செய்யுமா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
லியோ மிரட்டுமா: ஜெயிலர் படம் இந்தியா மற்றும் ஓவர்சீஸ் என மிகப்பெரிய ஓபனிங் செய்த நிலையில், அதை இந்த ஆண்டு லியோ படம் முறியடிக்குமா? கன்னடத்தில் வெளியான கேஜிஎஃப் 2, தெலுங்கில் வெளியான ஆர்ஆர்ஆர் போல 1000 கோடி வசூல் வேட்டையை நடத்துமா என்பதை இன்னும் 2 மாதம் வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











