»   »  பெங்களூர் திரைப்பட விழா... கவுரி லங்கேஷின் ஆவணப்படம் திரையிடப்படுகிறது

பெங்களூர் திரைப்பட விழா... கவுரி லங்கேஷின் ஆவணப்படம் திரையிடப்படுகிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர் : பெங்களூரில் 10-வது சர்வதேச திரைப்பட விழா வருகிற பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி மார்ச் 1-ம் தேதி வரை ஒரு வாரம் நடக்கிறது. இதில் 60 நாடுகளைச் சேர்ந்த 200 படங்கள் திரையிடப்படுகின்றன. தாய்லாந்து, ஜெர்மனி, லத்தீன் அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த படங்கள் அதிக அளவில் திரையிடப்பட இருக்கின்றன.

ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டு லெட் என்ற தமிழ் படமும், அசோகமித்ரன் ஆவணப் படமும் திரையிடப்படுகிறது. கர்நாடகாவில் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் ஆவணப்படமும் திரையிடப்படுகிறது.

Bangalore Intrenational film festival will starts on February 22

சர்வதேச திரைப்படங்கள், ஆசிய திரைப்படங்கள், இந்திய திரைப்படங்கள், கன்னட திரைப்படங்கள் ஆகிய 4 பிரிவுகளில் போட்டியும் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் படங்களுக்கு மார்ச் 1-ம் தேதி நடக்கும் நிறைவு விழாவில் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா பரிசு வழங்குகிறார்.

திரைப்பட விழாவின்போது தினமும் திரைப்படம் தொடர்பான கருத்தரங்குகள், விவாத அரங்குகள் நடக்கிறது. விழாவில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு திரைப்பட கலைஞர்கள் சுமார் 6 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கிறார்களாம்.

English summary
The 10-th International Film Festival in Bangalore will start from February 22 and continue till March 1.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil