Don't Miss!
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஆர்யா, ராணா, ஸ்ரீதிவ்யாவின் பெங்களூர் நாட்கள்.. குடும்பத்துடன் பார்க்கலாம்
சென்னை: ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, ராணா, சமந்தா, ராய் லட்சுமி மற்றும் பார்வதி ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் பெங்களூர் நாட்கள் படத்திற்கு எந்தவித கட்டும் இல்லாமல் யூ சான்றிதழை தணிக்கைக் குழு வழங்கியிருக்கிறது.
மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகியிருக்கும் படம் பெங்களூர் நாட்கள்.
இப்படம் தொடர்பான அனைத்து வேலைகளும் முடிவுற்றதைத் தொடர்ந்து படக்குழுவினர் பெங்களூர் நாட்கள் படத்தை தணிக்கைக் குழுவினருக்கு போட்டுக் காட்டினர்.
படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு எந்தக் கட்டும் கொடுக்காமல் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் யூ சான்றிதழை வழங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில் சற்று முன்னர் வெளியான இப்படத்தின் டிரெய்லர் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
வருகின்ற பிப்ரவரி 5 ம் தேதி இப்படத்தினை வெளியிட படத்தைத் தயரித்திருக்கும் பிவிபி சினிமாஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
வெற்றிமாறனின் விசாரணை, பிரசாந்தின் சாஹசம் ஆகிய படங்களுடன் பெங்களூர் நாட்கள் திரைப்படம் மோதுவது குறிப்பிடத்தகது.
பெங்களூர் டேஸ் வரலாற்றை பெங்களூர் நாட்கள் முறியடிக்குமா?